பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! பரபரப்பு தகவல்கள்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பதவிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே கடிதம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷிசுனக் பிரதமராக இருந்து வருகிறார். இங்கிலாந்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ரிஷிசுனக் திறமையாக கையாண்டு வருகிறார் என்ற கருத்து நிலவி வருகிறது. […]
காசாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு! அதிர்ச்சி தகவல்

காசாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாக வெளியான அதிர்ச்சி தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் மூண்ட போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் தீவிரம் காட்டி வரும் இஸ்ரேல் ராணுவம் காசாவில் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரையில் காசாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் அதில் அதிகபட்சம் கொல்லப்பட்டது குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலை […]
ஓட்டப்பந்தய பயிற்சியில் மாரடைப்பு! 14 வயது சிறுவன் பலி!

ஓட்டப்பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நாக்ஸ் மேக்ஈவன் என்ற 14 வயது சிறுவன் வசித்து வந்தான். டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலையில் படித்து வந்த நாக்ஸ் மேக்ஈவன், ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்ததோடு பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளான். தான் வசித்து பகுதி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த சிறுவன் நாக்ஸ் மேக்ஈவன், தன்னார்வலராகவும் செயலாற்றி வந்துள்ளான். […]
காசாவில் 4,104 குழந்தைகள் பலி! ஐ.நா. பொதுச் செயலாளர் அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல்& ஹமாஸ் போர் விளைவாக காசாவில் இதுவரை 4,104 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் தொடங்கி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலில் காசாவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் 4,104 பேர் குழந்தைகள், 2,640 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சியையும், […]
விராட் கோலி சுயநலவாதிதான்…. ஆனால்! வெங்கடேஷ் பிரசாத் சொல்வது என்ன?

தனது அணியின் வெற்றியை உறுதி செய்வதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி சுயநலவாதியாக இருக்கிறார் என்று வெங்கடேஷ் பிரசாத் கூறி அவரை பெறுமைப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று நடைபெற்ற இந்தியா& தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 326 ரன்களை எடுத்தது. இதில் விராட் கோலி 101 ரன்களை எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை […]
டெல்லி காற்றுமாசு! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பாதிக்குமா? ஐ.சி.சி. ஆலோசனை!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லியில் வங்கதேசம் இலங்கை இடையிலான உலகக்கோப்பை தொடர் குறித்து நிபுணர்களிடம் ஐ.சி.சி. ஆலோசனை நடத்தி வருகிறது. உலகக்கோப்பை போட்டித் தொடருக்கான இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்& இலங்கை அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இருநாட்டு அணிகளும் டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஐ.சி.சி. வீரர்களின் நலன் குறித்து நிபுணர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் […]
போர் எதிரொலி! இஸ்ரேலின் உறவை துண்டித்த பஹ்ரைன்!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள பஹ்ரைன் நாடு தனது உறவை துண்டித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் ராணுவம்& காசா அமைப்பினரின் போர் தொடங்கியது. இதில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் குழந்தைகள் மற்றும் பெண்கள்தான் அதிகம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இன அழிப்புக்கு இணையான போர் தாக்குதல் […]
அகதிகள் முகாமையும் விட்டுவைக்காத இஸ்ரேல்! ஐ.நா. கண்டனம்!

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடங்கி இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதில் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி, தரைவழி என சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் விளைவாக இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஒரு முக்கிய அதிர்ச்சி […]
இஸ்ரேல்- ஹமாஸ் போர்! இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள்!

உச்சத்தை எட்டியுள்ள இஸ்ரேல் -ஹமாஸ் போர் எதிரொலியாக காஸாவின் இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி ஆரம்பமான இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம், காஸாவை தரைமட்டமாக்கிவிட்டது. இதுவரையில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் உருகுலைந்து போயுள்ள காஸாவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு […]
போரை நிறுத்துவது ஹமாசிடம் சரணடைவதற்கு சமம்! இஸ்ரேல் பிரதமர்!

போர் நிறுத்தம் என்பது ஹமாசிடம் சரணடைவதற்கு சமம் என்று கூறிய இஸ்ரேல் நாட்டு பிரதமர் திட்டவட்டமாக போர் நிறுத்தத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சர்வதேச நாடுகள் தலையிட்டும் இன்னும் போர் நின்றபாடில்லை. இருதரப்பிலும் உயிர்சேதம் அதிகரித்துள்ள நிலையில் பணயக் கைதிகளும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரையில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் சோகத்தை […]

