News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவரா? மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமீப காலமாக அதிகரித்து வரும் இளம் வயதினரின் மாரடைப்புக்கு காரணம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுதான் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. இருப்பினும் பலர் நோய் தொற்றில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.     […]

இஸ்ரேல்- ஹமாஸ் போர்! 9,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான 24நாள் போரில் இதுவரை 9,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி (அக்டோபர்) இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் வான்வழி, தரைவழி என தாக்குதல்களை மேற்கொண்டு காஸாவை தரைமட்டமாக்கிவிட்டது. இதில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என பாரபட்சமின்றி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. உணவு, தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய […]

மரணதண்டடைனயில் இருந்து முன்னாள் வீரர்களை காப்பாற்றுவோம்! பா.ஜ.க. உறுதி!

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களையும் காப்பாற்றுவோம் என்று பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது. கத்தார் நாட்டில், அல் தஹ்ரா என்ற நிறுவனத்தில் இந்திய கடற்பனை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 8 பேரையும் கடந்த 2022ம் ஆண்டு கத்தார் நாட்டின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர். மேலும் அந்நாட்டு நீதிமன்றம் 8 பேருக்கும் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. […]

ஆசிய பாரா விளையாட்டு போட்டி: 100 பதக்கங்களை குவித்த இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரரான திலீப் மகாதேவ் கவித் தங்கம் வென்றார். இவர் இலக்கை 49.48 நொடிகளில் அடைந்து சாதனை படைத்தார். திலீப் மகாதேவ் கவித் பெற்றது இந்தியாவின் […]

இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று!

நடப்பாண்டான 2023ம் ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி வரும்போது ஏற்படும் நிகழ்வையே நாம் சந்திரகிரகணம் என்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று (அக்.28) நள்ளிரவு 1.03 நிமிடத்தில் துவங்கும் சந்திரகிரகணம் 2 மணி 23 நிமிடத்தில் முடிவடைகிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு இந்தியாவில் பார்க்க முடியும் என்பதால் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என்று ஏற்கனவே […]

C.S.K. ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன எம்.எஸ்.தோனி!

2024ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் […]

பாரா ஆசிய விளையாட்டு போட்டி! பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வரும் நிலையில் மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 5வது நாள் போட்டியில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதன்படி பாரா ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் காம்பவுண்ட் ஓபன் வில்வித்தை மற்றும் ஆண்கள் 1,500 மீட்டர் […]

இஸ்ரேல்- ஹமாஸ் போர்! 8 ஆயிரத்தை கடந்த பலி!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி போருக்கு பிள்ளையார் சுழிபோட்டு தொடங்கி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் போர் நிலையை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி காசாவில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி […]

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும்! எப்போது தெரியுமா?

வருகிற 2030ம் ஆண்டுக்குள் உலக பொருளாதார வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார வரிசையில் அமெரிக்கா  முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் உலக பொருளாதார வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை […]

முற்றும் மோதல்! 41 தூதர்களை திரும்பப் பெற்ற கனடா!

இந்தியாவில் இருந்து 41 தூதர்களை திரும்பிப் பெற்றுவிட்டதாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய- கனடா நாட்டிற்கு  இடையிலான மோதல் முற்றுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இந்தியா &கனடா நாட்டுக்கு இடையிலான நட்புறவு கேள்விக்குறியானது. அதனால் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய தூதரக உயர் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு,  இந்தியாவில் பணியாற்றி […]