மருத்துவமனைக்கு கீழ் ரகசிய சுரங்கப்பாதை சிக்கியது! இஸ்ரேல் அதிரடி!

காசா மருத்துவமனைக்கு கீழ் ரகசிய சுரங்கப்பாதையை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தரைவழி, வான்வழி தாக்குதல்களால் காசா நகரமே முற்றிலும் மயானபூமியாக காட்சியளிக்கிறது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் என்பதும் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பலியாவதாகவும் ஐ.நா. அதிர்ச்சி […]
1.3 லட்சம் ரசிகர்களுக்காக இதை செய்வோம்! பேட் கம்மின்ஸ்!

நாளை மைதானத்தில் கூடும் 1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று ஆஸ்திலேரிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாளை மதியம் 2 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் […]
உச்சகட்ட சோகத்தில் பாலஸ்தீனர்கள்! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!

கட்டிட இடிபாடுகளுக்குள் தங்கள் குடும்பத்தினரும், உறவினர்களும் உயிருடன் இருக்கிறார்களா என்று பாலஸ்தீன மக்கள் தேடி அலையும் சோகக் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் போர் தொடங்கியது. போர் தொடங்கிய நாள் முதல் இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழியாக ஆயிரக்கணக்கான குண்டுகளை வீச நகரத்தையே குப்பைமேடாக மாற்றியது. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். […]
ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி! அமெரிக்க அதிபர் ஜோபைடன் நெத்தியடி!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஒரு சர்வதிகாரி என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் பகிரங்கமாக குறிப்பிட்டு சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவாக […]
2 மாத கர்ப்பிணிக்கு அமெரிக்காவில் நடந்த கொடூரம்!

2 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்கா சிகாகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் உழவூரைச் சேர்ந்த மீரா என்ற 32 வயதான பெண், தனது கணவர் அமல்ரெஜி மற்றும் 3 வயது குழந்தையுடன் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் வசித்து வருகிறார். இதில் மீரா தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்றிரவு கணவர் அமல் மீராவை திடீரென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்து தகவல் […]
இரட்டை போர்க்குற்றம் செய்யும் ஹமாஸ் பயங்கரவாதிகள்! இஸ்ரேல் குற்றச்சாட்டு!

காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களை குறிவைத்து கொலை செய்வதை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போருக்கு அஞ்சி 15 லட்சம் புலம்பெயர்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் […]
பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்! பொது மக்கள் பீதி!

பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் நேற்று (நவ.15) நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவானது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கி.மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் […]
இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்? இந்தியா& நியூசிலாந்து நாளை மோதல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நாளை நடைபெற உள்ள இந்தியா& நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 13வது ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தன. […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி! லண்டனில் சோகம்!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் லண்டனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை கடந்த 12ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டினரும் கோலாகமாக கொண்டாடினர். அதேபோல் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினரும் தீபாவளி பண்டிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடினார்கள். தீபாவளி பண்டிகையன்று இரவு 10.30 மணியளவில் இவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு 2 […]
அம்பலமான ரகசிய சுரங்கப்பாதை! இஸ்ரேல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

காசா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் அமைப்பினர் ரகசிய சுரங்கப்பாதை அமைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையில் போர் மூண்டது. போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காசா பகுதியே முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டது. வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக 40 சதவீத குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் […]

