News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்! வெண்கலம் வென்ற மனுபாக்கர்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிசில் கடந்த 26ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.   இந்நிலையில் இன்று (29ம்தேதி) நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 3வது இடத்தை பிடித்தார். அதன்படி 2024ம் ஆண்டு ஒலிம்பிக் […]

ஒலிம்பிக் விழா நடக்காமல் செய்ய சதி? குழப்பத்தில் சர்வதேச நாடுகள்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.   போட்டி தொடருக்கு முன்னதாக அனைத்து விளையாட்டு வீரர்களையும் 600 படகுகளில் செய்ன் நதியில் ஊர்வலமாக அழைத்து செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் சிறிது […]

துப்பாக்கிச் சூட்டில் ரத்தம் சொட்டச்சொட்ட உயிர் தப்பிய டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   பிட்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த கூட்டத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவே ட்ரம்ப் குனிந்தார். ஆனாலும், அவர் காதை […]

ஸ்டாலின் வழியில் இங்கிலாந்தில் ஸ்டார்மர் வெற்றி. சீமான் வழியில் உமா குமரன் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதற்கு, அவர்கள் தி.மு.க. கொள்கையைப் பின்பற்றியது தான் காரணம் என்று ஸ்டாலின் அறிவிப்பு செய்திருக்கிறார். பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த காலகட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக போரிஸ் ஜான்சன், லிஸ்டிரஸ் என பிரதமர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். கடைசியாக5-வது நபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், மொத்தம் […]

சென்னை யூடியூபர் கடத்திய 267 கிலோ தங்கம்! அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் கடந்த 2 மாதங்களில் 267 கிலோ அளவுக்கு  தங்கம் கடத்தல் நடந்திருக்கும் சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளின் தலையை சுற்றவைத்துள்ளது.   பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், அரிய வகை உயிரினங்கள் உள்ளிட்டவற்றை கடத்தும் கடத்தல் கும்பல் பல்வேறு யோசனைகளை செயல்படுத்துவது வழக்கம். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் அவை பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு […]

துபாயில் செயற்கை மழையா…? வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்க்குது வானம்

வளைகுடா நாடுகள் என்றாலே கடுமையான வெயில், வறண்ட வானிலை என்றாலும் அவ்வப்போது அதீத மழைப்பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் மழையை சந்தித்துள்ளது. வரலாற்றில் இல்லாத ஒன்றாக இடைவிடாமல் செய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் யுஏஇ மற்றும் ஓமனில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. துபாய் முழுவதும் […]

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்… பெட்ரோல் விலை உயரும்… மூன்றாம் உலகப்போர் ஆபத்து

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையை மீறி ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கினால் மூன்றாவது உலகப் போர் தொடங்கவும், உலகெங்கும் பெட்ரோல் போன்ற எரிபொருள் கிடைப்பதற்கு சிக்கலும் உருவாகும் என்று தெரியவந்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் காரணமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருசேர குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.  இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் […]

விமானத்தில் எல்லை மீறிய ஜோடி: புகைப்படங்கள் வைரல்!

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஜோடி திடீரென்று எல்லை மீறி நடந்து கொண்ட சம்பவம் புகைப்படமாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களில் தினந்தோறும் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேநேரம் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். ஒரு சில பதிவுகள் மக்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் எக்ஸ் வாடிக்கையாளர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையவாசிகளை அதிரச் செய்துள்ள பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் […]

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: பின்னுக்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்தை பிடித்துள்ளார். உலகப்பணக்காரர்கள் பட்டியலில் பெர்னார்டு அர்னால்டு முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், 2வது இடத்தில் ஜெப் பசோஸ் உள்ளார். புளூம்பெர்க் பில்லினியர்கள் குறியீட்டின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்த ஜூகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 58.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு […]

நைஜீரிய கொக்கைன் கடத்தல் கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு..!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துபவர்களையும், கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுக்கு இணங்க, காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து விரட்டிப்பிடித்து கைது செய்து வருகிறார்கள்.  சமீபத்தில் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என 63 நபர்களை கைது செய்து 1,788 கிலோ குட்கா புகையிலையைக் கைப்பற்றி அதிரடி காட்டியது.  இதன் தொடர்ச்சியாக அண்ணாநகர் காவல் மாவட்ட […]