News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

18 மணிநேரம் தொடர்ந்து வேலை! உணவு டெலிவரி ஊழியரின் சோக முடிவு!

சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை பார்த்த உணவு டெலிவரி ஊழியர் பைக்கில் தூங்கியபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   எட்டு எட்டாக மனித வாழ்க்கையை பிரிக்க வேண்டும் என்று பாட்ஷா திரைப்படத்தில் வருகிற வரிகளை இப்படியும் பயன்படுத்தலாம். அதாவது 8 மணி நேர வீட்டு வேலை, 8 மணி நேர அலுவலக வேலை கடைசி 8 மணிநேரம் உறக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு எட்டு குறைந்தாலும் அது மனிதனின் […]

தேநீர், உணவு இடைவெளிகளில் உடலுறவு! ரஷியர்களுக்கு அதிபர் புதின் உத்தரவு!

பணியிடங்களில் உணவு மற்றும் தேநீர் இடைவெளிகளை உடலுறவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.     ரஷியா உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ரஷியாவின் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது ரஷியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க வேண்டுமென்றால் ஒரு பெண்ணுக்கு 2.1 சதவீதம் என்ற அளவுக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் அது தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.   […]

குரங்கு அம்மை அலர்ட்! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை!

டெல்லியில் நோயாளி ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.   டெல்லியில் எம்பாக்ஸ் வைரஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.   வெளிநாட்டில் இருந்து திரும்பிய பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக […]

மகளின் பாதுகாப்புக்காக தந்தை செய்த விஷயம்!

பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்க  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது அரசாங்கம் மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பது இல்லை. அதற்கு ஏற்ப வகையில் பாகிஸ்தானில் ஒரு அபூர்வ சம்பவம் நடந்துள்ளது.   மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடான சி.சி.டி.வி. கேமராக்கள் குற்றங்களை தடுக்கவும், நடந்து முடிந்த குற்றங்களுக்கு சாட்சியாகவும் அமைந்துவிடுகிறது. கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்க சி.சி.டி.வி.யின் பங்கு […]

வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்! வலுக்கும் ஆதரவு!

33வது ஒலிம்பிக் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் இந்திய மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகாட் தனக்கு நடந்த அநீதியால் அதிருப்தியடைந்து ஓய்வை அறிவித்தார்.   பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கியூபா நாட்டு வீராங்கனையை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தார். கடந்த 8 மணி நேரத்தில் 3 சர்வதேச வீராங்கனைகளை வெற்றி கண்ட வினேஷ் போகாத் அமெரிக்க […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகாத்!

2024 ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாத் தற்போது பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   நேற்று (ஆக.6) நடைபெற்ற பெண்கள் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் கியூபா நாட்டு வீராங்கனையை எதிர்த்து விளையாடிய வினேஷ் போகாத், 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் இறுதிப் போட்டிக்கு தேர்வானது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.   இதைத்தொடர்ந்து முன்னாள் மல்யுத்த வீராங்கனை […]

வங்கதேசத்தில் அடங்காத வன்முறை. இந்தியாவுக்குத் திரும்பும் 1 கோடி இந்துக்கள்?

இந்தியாவிற்கு தப்பிவந்திருக்கும் ஷேக் ஹசீனா இன்னும் இரண்டு நாட்கள் இங்கு தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதால் லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஐக்கிய அரபு அமீரகத்திடமும் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு ஆபத்து நிலவுவதாகவும் அவர்களை இந்தியாவில் குடியேற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று அங்கு இஸ்லாமியர்கள் கூறிவந்தாலும் சில இடங்களில் வன்முறை […]

தப்பியோடிய ஷேக் ஹசீனா! இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாரா?

வங்கதேச பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனா தப்பியோடியுள்ள நிலையில், அவர் இந்தியாவில்  தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் மாணவர்களின் போராட்டம் […]

போராடிய மாணவர்கள் கொன்று குவிப்பு. ரத்த ஆறு ஓடும் வங்கதேசத்துக்குப் போகாதீங்க…

ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்திருப்பதால் நாடெங்கும் ரத்தக்களறியாகி வருகிறது. காவல் துறையும் போராட்டக்காரர்களும் நடத்திவரும் போராட்டத்தில் ஏகப்பட்ட அப்பாவி மக்களும் பலியாகிவருகிறார்கள். நாடு முழுக்க ரத்த ஆறு ஓடுகிறது. ஆகவேவங்கதேசத்துக்குப் பயணிக்க வேண்டாம் என்று இந்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது. கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் […]

பாரிஸ் ஒலிம்பிக்: 3வது பதக்கத்தை வென்ற இந்தியா!

ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெண்கலம் வென்றுள்ள இந்தியா தனது 3வது பதக்கத்தை பதிவு செய்துள்ளது.   பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.   போட்டித்தொடரின் 7வது நாளான இன்று (ஆகஸ்ட்1) ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே […]