News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திறந்தாச்சு பிரமாண்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையுமா..?

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இனி, தென் தமிழகம் நோக்கி செல்லும் பேருந்துகள், கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு […]

அமைச்சர் உதயநிதியின் 46வது பிறந்தநாள்! பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

அமைச்சர் உதயநிதி தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (நவ.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பேசினார்.   தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதே போல் முன்னாள் முதலமைச்சரும் தனது தாத்தாவுமான கருணாநிதியின் நினைவிடத்திலும் […]

எக்ஸ் வலைதள வருமானம்! எலான் மஸ்க் எடுத்த முக்கிய முடிவு!

எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானத்தை இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைகளை சீரமைக்க வழங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காசாவில் பொதுமக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். […]

Scam Alert : மின்வாரியம் சொல்வது என்ன?

மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்வாரியத்தை மையப்படுத்தி புதிதாக களைகட்டியுள்ள ஸ்கேம் பற்றி மின்வாரியம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் மின் கட்டண நிலைப்பாடு குறித்து சரிபார்த்த பின்னர், நீங்கள் அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள். […]

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும்! எப்போது தெரியுமா?

வருகிற 2030ம் ஆண்டுக்குள் உலக பொருளாதார வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார வரிசையில் அமெரிக்கா  முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் உலக பொருளாதார வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை […]

ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி! உற்சாகத்தில் விஞ்ஞானிகள்!

  ககன்யான் திட்ட மாதிரி முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.   இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதே போன்ற முயற்சியை இதற்கு முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளதால் இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுகளை அந்நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.   இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் […]

‘எக்ஸ்’ பக்கத்தில் இருக்கிறீர்களா? இனி இதெல்லாம் இலவசம் கிடையாதாம்!

இனி எக்ஸ் பயனாளிகளிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகளவில் எக்ஸ் பக்க பயனாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். எக்ஸ் தள பக்கத்தில் கருத்துகள், வீடியோக்கள், போட்டோக்கள் என பதிவேற்றம் செய்வதையும், புரமோஷன்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.  மேலும் லைக் செய்வது, கமெண்ட் செய்வது, பாலோ செய்வது என ஆண்ட்ராய்டு போன்களில் எக்ஸ் பக்கத்தை டீபால்டாகவே பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தொழிலதிபரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான […]

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு! பின்னணி தகவல்கள்!

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலால் வேதனையடைந்த கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 5வது நாளாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் 3,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டிற்கு வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் சென்றவர்களை அந்தந்த நாட்டினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கூகுள் நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் ஹைஃபா, டெல் அவிவ் பகுதிகளில் […]

1,000 குழந்தைகளுக்கு இலவசக் கல்வி! ஊபர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

  ஊபர் நிறுவனம் இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ஓட்டுநர்களுடைய 1,000 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாகக் கொண்டு ஊபர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 70 நாடுகளில் 11 ஆயிரம் நகரங்களில் வாடகைக் கார் சேவையை செய்து வரும் ஊபர் இந்தியாவில் தனது சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.   அதனை கொண்டாடும் […]

ஒன்பிளஸ் ஓபன் ஃபோல்டபில் போன்! என்ன விலை தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடக்கக்கூடிய (ஃபோல்டபில்) ஸ்மார்ட்போன், ‘ஒன்பிளஸ் ஓபன்’ என்ற பெயரில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் புதிய மொபைல் போன்கள் குறித்த தேடலும், கொள்முதலும் அதிகரித்து வருகிறது. இந்த மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படும் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட் போனின் விலை மற்றும் பிரஸ் டெண்டர்கள் வெளியாகி உளளன. ஒன்பிளஸ் மாடல் 31 பாகங்கள் […]