News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் இனி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.   தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.   அதன்படி தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.   மேலும் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண்மை மற்றும் […]

ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு! தமிழக சட்டப்பேரவைக்கு வருகை!

தமிழக சட்டப்பேரவைக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் வருகை புரிந்துள்ளனர். சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடிய நிலையில் கர்நாடக அரசை காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி ஒன்றிய அரசை உத்தரவிடக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக கொண்டு வந்தார். இதற்கிடையில் சட்டப்பேரவையின் நடவடிக்கையில் நேரில் காண்பதற்காக  ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுத் தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு […]

5ஜி இணைய சேவை! தரவரிசையில் 47வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

5ஜி இணைய சேவை சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா 47வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.   இந்தியாவில் அதிவேக இணையசேவையான 5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இதன் மூலம் இந்தியாவின் இணைய வேக செயல்திறன் 3.59 மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் தேர்வை அதிகப்படுத்திள்ளது.   அதன்படி கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதத்தில் வினாடிக்கு 13.87 எம்.பி.யாக கணக்கிடப்பட்டிருந்த சராசரி […]

உலகமே எதிர்பார்த்த நாள் இன்று! முக்கிய முயற்சியில் இஸ்ரோ!

நிலவின் தென்துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ உள்ளதால் உறக்கத்தில் இருக்கும் லேண்டரை மீண்டும் இயக்குவதில் இஸ்ரோ தனது முழு முயற்சியை மேற்கொண்டு வருவது உலகையே திரும்பி  பார்க்க வைத்துள்ளது. கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் […]

கடல் வளத்தை ஆய்வு செய்ய ‘மத்ஸ்யா 6000’ வாகனம் ரெடி! புகைப்படங்கள் வைரல்!

கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை கடலுக்குள் செலுத்தும் சமுத்யாரன் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது உலக விஞ்ஞானிகளின் இருக்கை நுனிக்கே கொண்டு சென்றுள்ளது. நிலவை ஆராய்வதற்காக சந்திரான்3 விண்கலத்தை இந்தியா கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அதைத்தொடர்ந்து சந்திராயன் 3 விண்ணில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்&1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக கடந்த […]

மேம்படுத்தப்பட்ட ஐபோன்-15 இன்று அறிமுகம்! விலை கூட இவ்வளவுதான்

ஐபோன்கள் என்றால் அடுத்தடுத்த அறிமுகங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கத்தான் செய்கிறது. உடனே இணையத்தை அலசி ஆராய்ந்து தாங்கள் எதிர்பார்க்கும் பீச்சர்ஸ்கள் இருக்கிறதா என்று கண்டுபிடித்து வாங்கி விடுகிறார்கள் வாடிக்கையாளர்கள். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இன்று ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் அறிமுக விழா இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.  இந்நிகழ்ச்சியை இணையவாசிகள் இணையத்தில் கண்டு பயன்பெறலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபோன் […]