Share via:
கரப்பான் பூச்சி இயக்கத்துக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியின்
இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்
காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய
எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி போலீஸ் அடாவடியாக கைது செய்திருக்கிறது.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை
முன்னிட்டு ஒன்றுகூடிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர்
ஒன்று கூடினார்கள். அதன்பிறகு மாணவர்களின் போராட்டம் பிரச்சினையில் பிரதமரைத் தட்டி
எழுப்புவோம். அவரது இல்லத்திற்குச் செல்வோம்” என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்து,
போராட்டத் திட்டத்தை அறிவித்தார்.
இதையடுத்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும்
‘இந்தியா’ கூட்டணியின் முக்கியப் பிரதிநிதிகள் பிரதமர் இல்லம் நோக்கிப் பேரணியாகச்
சென்றனர். கார்கேவின் இல்லத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பிரதமர்
மோடியின் இல்லம் அருகே தலைவர்கள் திரண்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்புப்
படையினர் பெரும் திணறலுக்கு உள்ளாயினர்.
இந்த எதிர்பாராத திடீர் போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த மத்திய
அரசு, நிலைமையைக் கட்டுப்படுத்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும்
மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோரை போராட்ட இடத்திற்கு அனுப்பி வைத்து,
நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்றும், போராட்டத்தைக்
கைவிடுமாறும் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மத்திய கல்வி அமைச்சர்
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என ராகுல் காந்தி திட்டவட்டமாக
மறுத்துவிட்டார்.
இதையடுத்து, மாலை 6:40 மணியளவில் காவல்துறையினர் பலவந்தமாகக் கைது
நடவடிக்கையில் இறங்கினர். ராகுல் காந்தியைப் பலவந்தமாக இழுத்துச் சென்று பேருந்தில்
ஏற்றியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவரது மூக்கில் காயமும், கண் மற்றும் நெஞ்சுப்
பகுதியில் லேசான காயங்களும் ஏற்பட்டன. ராகுல் காந்தியுடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர்
அகிலேஷ் யாதவும் கைது செய்யப்பட்டார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைப் பேருந்திற்குள்
தள்ள முயன்றபோது, அவர் கதவைப் பிடித்துக்கொண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர்
காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் பேருந்தின் ஜன்னல் வழியாக
“மோடி ஒரு கோழை”, “சர்வாதிகாரம் செல்லாது” என்று அவர் முழக்கமிட்டார்.
கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி மாடல் டவுனில் உள்ள சத்ரசால் மைதானத்திற்கும், பிரியங்கா
காந்தி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகளால்
தங்களது போராட்டம் தொய்வடையாது என்றும், புதன்கிழமை நாடாளுமன்றச் செயல்பாடுகளை முடக்குவதை
அரசு உறுதி செய்துவிட்டதாகவும் காங்கிரஸ் ஆவேசமாக அறிவித்துள்ளது.
ராகுல் காந்தி கைதுக்கு இதுவரை மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை
என்பதுடன் திமுகவினர் இந்த கைதை கொண்டாடிவருகிறார்கள். விஜய் அரசு வழக்கம்போல் பேருக்காக
ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேநேரம், தமிழகத்தில் போராடும் குழுக்களை அடக்குமுறை
மூலம் கைது செய்துவருகிறது.
நீட் ஒழியட்டும்.