Share via:
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக
அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது பாஜக அரசு கண்மூடித்தனமான தாக்குதலை
நடத்தி உள்ளது. இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஜய் வாயைத் திறக்கவே இல்லை.
தவெகவின் ஐ.டி. விங் இந்த அராஜகத்தை, ‘’கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும்
காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்…’
என்று மயிலிறகால் தடவிக்கொடுத்துள்ளது. அதாவது பாஜகவுக்கு ஆதரவாக பல்லக்கு தூக்கியிருக்கிறது.
நேற்றைய தினம் காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டத்தைத் தொடர்ந்து
ஜனாதிபதி மாளிகை மூடப்பட்டது. பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்
டெல்லியில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவியது இவர்கள் டெல்லியையே கைபற்றி விடுவார்களோ
என்ற சூழ்நிலை நிலவியது.
இவர்களின் கோரிக்கைகள்
எல்லாம் நியாயமானவை என்றாலும் அரசு வேடிக்கை பார்க்கிறது. நீட் தேர்வு முறைகேடுகளை செய்தவர்களை கைது செய்ய
வேண்டும் குறிப்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான கைது செய்ய வேண்டும் என்பதுதான்
முதல் முக்கிய கோரிக்கை. அதேபோல் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதை தடை
செய்ய வேண்டும் விலை போகும் எம்.எல்.ஏ., எம்.பி.களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க
வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அம்பானி அதானி போன்ற தொழிலதிபர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு
ஆடும் போக்கை கைவிட வேண்டும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு உரிமைகளை ரத்து செய்ய
வேண்டும். அவர்களுக்கு வழங்கிய பல்லாயிரம் கோடி கடன்களை ரத்து செய்ததை திரும்ப பெற
வேண்டும். மக்களின் ஓட்டுரிமையை பறிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய
வேண்டும் என எல்லாமே மிகச் சிறப்பான கோரிக்கைகள்
ஆனால், இவர்களை பாகிஸ்தானின் தூண்டுதலில் செயல்படுகிறார்கள் என்றும்
மாவோயிஸ்டுகள், தேசவிரோதிகள் என்று பல முத்திரைகளை பிஜேபி ஊடகங்கள் குத்துகின்றன. கரப்பான்
பூச்சிகளை அத்தனை சீக்கிரம் அழிக்க முடியாது என்றே தோன்றுகிறது.