Share via:
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில்
அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடு வழக்கில்,
நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர்.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான
ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக
சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்தவர், வாங்கியவர்கள் என 4 பேர்
மீது பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சார் பதிவாளர்
ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பத்திரப்
பதிவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி,
தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தனர்.
இந்த நிலையில் நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ்
சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேரந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய
உடுமலைப்பேட்டை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை மற்றும் பழநி டி.கே.என்.புதூரைச்
சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் தங்கள் செல்போன்களை ஸ்விட்ச்
ஆப் செய்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் பத்திரப்பதிவு நாளில்
சாட்சி கையெழுத்து போட்டவர்களும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களைத் தேடும் பணி நடந்து
வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான மூர்த்தி,
‘’நான் முன்னாள் பதிவுத்துறை அமைச்சர் என்ற முறையில் கோயில்கள் இடத்தை பதிவே செய்ய
முடியாது. சம்பந்தப்பட்ட இடம் கோயில் நிலமாக இருந்தாலும், அரசு நிலமாக இருந்தாலும்,
நீர் நிலை புறம்போக்கு சொத்தாக இருந்தாலும் பதிய முடியாது. இன்று ஒரு சொத்தை பதிய
வேண்டும் என்றால் ஒரு டோக்கன் போட வேண்டும். டோக்கன் போடாமல் பதிய முடியாது. இது
தெரியாம பதிந்து விட்டார்கள். எதார்த்தமாக நடந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 516 அலுவலகத்தில் நான் ஆட்களை நியமனம் செய்ததாகவும்
அவர்கள் மூலமாக நான் பணம் வாங்குவதாக சொல்கிறார். என் பெயரை குறிப்பிட்டே சொல்கிறார்.
அதை அவர் நிரூபிக்க வேண்டும். பத்திரப்பதிவுத் துறையில் நினைப்பதையெல்லாம் பண்ண முடியாது.
முதலைமைச்சர் நிழலாகத்தான் அந்த அமைச்சர் இருக்கிறார். இரண்டு
துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால், எல்லா துறைக்கும் பதில் சொல்வார். குறிப்பாக அறநிலையத்துறை
கோயிலுக்கு சொந்தமான நிலம் ஒரு சென்ட் இருந்தாலும், எத்தனை ஏக்கர் இருந்தாலும் பதிவு
செய்யக்கூடாது என்று அலுவலகப் பதிவேற்றம் உள்ளது. அதையும் மீறி பதிவு செய்து உள்ளனர்’’
என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.
அதுவும் சரிதான். குற்றச்சாட்டு எழும்போது அமைச்சர் பதவி விலகி
விசாரணையை எதிர்கொள்வதே சரியானது. யாரையும் தப்பு செய்ய விட மாட்டேன் என்று சொல்லும்,
அமைச்சரை பதவி விலகச் சொல்வாரா..?