News

Follow Us

ரிஷிவந்தியம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா திடீரென கண்ணீர் சிந்தி உருக்கமாகப் பேசினார். இது விஜயகாந்த் தொகுதி என்பதால் என்னால் பேசவே முடியவில்லை, கண்ணீர் கொட்டுகிறது என்று அழுது, ‘விஜயகாந்துக்காக வாக்குப் போடுங்கள்’ என்று உருக்கமாகப் பிரசாரம் மேற்கொண்டார்.

அதே பாணியில் விஜயபிரபாகரனும் விஜயகாந்த் ஆன்மாவை வைத்து ஓட்டு கேட்டு வருகிறார். விஜயபிரபாகரன் நிற்பதால் விருதுநகர் தொகுதி திடீரென ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிற்க அவருக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணி சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் பா.ஜ.க. சார்பில் ராதிகாவும் நிற்கிறார்கள்.

முன்பு விஜயகாந்துக்கும் ராதிகாவுக்கும் இருந்த உறவை நினைத்துப் பார்க்கும் ரசிகர்கள், ‘விருதுநகரில் அம்மாவும் மகனும் போட்டி போடுகிறார்கள்’ என்று சிலாகித்து வருகிறார்கள். இந்த தேர்தலுக்குப் புதிதாக களம் இறங்கியிருக்கும் விஜயபிரபாகரனின் புதிய பேச்சு ஏரியா மக்களை சிரிக்க வைத்திருக்கிறது.

சிவகாசியில் பேசிய விஜயபிரபாகரன், ‘நாம் அனைவரும் உறவினர்கள் தான். விருதுநகர் தொகுதியில் குடிநீர், பேருந்து சேவை, சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரெட் பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் பட்டாசு தொழில் முடங்கி உள்ளது. லைட்டர் பயன்படுத்துவதால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகள் நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர் என்ன செய்தார் என்பது உங்களுக்கு தெரியும். நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை.

என்ன செய்ய போகிறோம் என்பதை பேச வந்துள்ளேன். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுகவை இரும்பு பெண்மணியாக ஜெயலலிதா வழிநடத்தியதை போல், விஜயகாந்த் மறைவிற்குப் பின் தேமுதிகவை பிரேமலதா வழிநடத்தி வருகிறார்.

மக்களவையில் உங்களது குரலாக எனது குரல் ஒலிக்கும். மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் நீண்ட நாள் கனவு. எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடையும். நீங்கள்தான் எனக்கு தாய் தந்தை. எனவே எனக்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்யுங்கள்…’ என்று தெரிவித்தார்.

விஜயபிரபாகரனுக்கு ஓட்டு போடலைன்னா விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடையாதா… இது என்ன புது காமெடி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link