Share via:
ஈரான் – அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் நிறைவேறப்போகிறது என்று உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் மீண்டும் போர் அபாயச் சூழல் உருவாகிவிட்டது.
ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனால் அமெரிக்கா, தங்களது கடற்படை கப்பல் போக்குவரத்து தொடர்வதற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே மீண்டும் போர் சூழல் உருவாகியுள்ளது.
ஹர்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகிய கடல் பாதை. உலகில் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே செல்கிறது. எனவே இந்த பாதையில் ஏற்படும் எந்த தடையும் உலக பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.
இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டால் பெட்ரோல் விலை உயரலாம். சவுதி அரேபியா, ஈராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
இந்தியா தனது கச்சா எண்ணெயின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதனால் எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும். பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை அதிகரித்து பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சண்டையை நிறுத்திட்டு, பேசுங்கப்பா.

