Share via:
0
Shares
சென்னையில் ஆட்டோ ஓட்டுனரின் வங்கிக் கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரது வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.9,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வரவு வைத்துள்ளது.
இது குறித்து அறிந்த சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தாங்கள் தவறுதலாக வரவு வைத்துவிட்டோம் என்று ஆட்டோ டிரைவரை அணுகி வழக்கறிஞர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆட்டோ ஓட்டுனர் தனது நண்பருக்கு அனுப்பி வைத்த ரூ.21 ஆயிரம் பணத்தை தவிர மீதியுள்ள அனைத்து தொகையையும் வங்கி நிர்வாகம் திரும்ப பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tagged latest