News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சமீபத்தில் அமித்ஷாவை விஜய் சந்தித்துப் பேசியதிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் அனலில் போட்ட புழுவாக துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய சி.எம். நாளைய பி.எம். என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி சொன்ன கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் ரியாக்‌ஷன் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ராகுல் காந்தியே அடுத்த பிரதமர் என்று முதன்முதலாக பேசியவர் மு.க.ஸ்டாலின். ஆனால், திமுகவை கழற்றிவிட்டு தவெக வண்டியில் ஏறிவிட்டார் ராகுல் காந்தி. இந்த நிலையில், முதல்வர் நிலையிலிருந்து பிரதமர் விஜய் என்று அவரது அமைச்சர்களே பேசத் தொடங்கி விட்டனர்.

இதற்கு மாணிக்கம் தாகூர், ‘’அவங்க இன்னும் ரசிகர் மன்ற மோட்லயே இருக்காங்க.. அவங்கள மாத்த முடியாது. என்று கிண்டல் செய்திருக்கிறார். அதோடு, ஒரு எம்.பி. கூட இல்லாத தவெகவை இண்டியா கூட்டணியில் சேர்க்கமுடியாது. எங்களால்தான் விஜய் ஆட்சி இன்னமும் நீடிக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.

இதற்கு கொந்தளிக்க வேண்டிய தவெகவினர் அமைதியாக இருக்க பாஜகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியும் கொதிக்கிறார்கள். பாஜகவின் வினோஜ் செல்வம், ‘’விஜய் தான் அடுத்த பிரதமர் என்று தவெக அமைச்சர்கள் பேசத் தொடங்கியதும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினருக்கு பேதியாகிவிட்டது.. காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் மனநிலை பாதித்தது போல் ஏதேதோ புலம்ப ஆரம்பித்து விட்டார். அவரது புலம்பலை பார்த்து ரசிப்போம்.

தவெக அமைச்சர்கள் அனைவரும் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள்.இவர்களுக்கு காங்கிரஸ் கடிதம் கொடுத்ததால்தான் அமைச்சரானார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று தணிந்த குரலில் மாணிக்கம் தாகூர் பேசியது காங்கிரஸின் இயலாமையை காட்டுகிறது

முழு விருந்து (தவெக அமைச்சரவை) பரிமாறிய இலையில் ஏதோ ஒன்று குறையாகத் தென்பட, கடைசியாக வைக்கப்பட்ட ஊறுகாய் தான் காங்கிரஸ் கட்சி என்பதை மறந்துவிட்டு பேசுகிறார் மாணிக்கம் தாகூர். அதிலும், ஊறுகாய்க்கு நடு இலையில் இடம் கொடுத்ததைப் போல, அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுத்தார் விஜய்.

அவர்கள். ஒரு அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அமைச்சரவையில் பங்கெடுக்கும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்ளாமல், எங்களால் தான் விஜய் முதல்வர் என்று திமிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் மாணிக்கம் தாகூர். இந்த பர்னிச்சரையும் உடைத்து விட்டீர்கள் என்றால் தமிழ்நாட்டில் தனித்து விடப்படுவீர்கள்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

பனை மரத்தில் இடி விழுந்தால் தென்னை மரத்தில் தீ எரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link