Share via:
திமுக நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சும் வகையிலும்,
இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் பல்வேறு மாற்றங்கள் செயற்குழுவில்
நடந்துள்ளன. இதில், தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கனிமொழி அப்செட்
ஆகியிருப்பது ஹைலைட் ஆகியுள்ளது.
செயற்குழு தீர்மானத்தின் படி திமுக மாவட்டச் செயலாளருக்கு வயது
வரம்பு – 70, ஒருவர் இரண்டு முறை மட்டுமே மாவட்டச்
செயலாளராக இருக்க முடியும், ஒன்றியச் செயலாளர்களுக்கு
வயது வரம்பு 60, கிளைச் செயலாளர்களுக்க வயது வரம்பு 45, மாநகரச் செயலாளர் எனும் பொறுப்பு
இனி இல்லை, நகரச் செயலாளர்களுக்கு வயது வரம்பு 60, பேரூர் செயலாளர்களின் வயது வரம்பு
50, மாநகராட்சி வட்டச் செயலாளர்கள் வயது வரம்பு
50, திமுகவில் 110 மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாநில நிர்வாகிகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்குழுவில் பேசிய ஸ்டாலின், ‘’நாம் பார்க்காத வெற்றியும் இல்லை;
நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக
இல்லை. கழகத்தின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக்
கொள்வோம்.
கழகத்தின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம்.
கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு
நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த மாறுதல்கள் அடுத்த
நூறாண்டுக்கு கழகம் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும்.
புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை
வழங்கப் போகிறோம். விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நாம் தொடங்க
வேண்டும். உறுப்பினர் சேர்க்கை நேர்மையானதாக – உண்மையானதாக அமைய வேண்டும். உறுப்பினர்
சேர்க்கைக்கு பிறகு அனைத்து மட்டத்திலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம். தகுதி
வாய்ந்த புதிய நிர்வாகிகள் வெற்றி
பெற்று வருவார்கள். தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில
அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.
ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில்
கட்சியை வளர்த்துவிட முடியாது. ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே வலிமையாக
இருந்தால் அந்தத் தொகுதியில் வென்றுவிட முடியாது. ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக
செயல்படும் போதுதான் இயக்கம் வளரும், இயக்கம் வாழும்.
நாம் போரடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள இல்லை – போராட வந்தவர்கள்!
வெற்றி
தோல்வியில் நம் இயக்கத்தின் வாழ்க்கை அடங்கி இருக்கப் போவது இல்லை. ஒரு
தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரும் வரை தூங்கி
வழிவதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம். எதிர்கட்சியாக இருந்தாலும் சுணங்கிடாமல்,
மக்கள் நலனுக்காக சிறப்பாகச் செயல்படும் கட்சி திராவிட முன்னேற்றக்
கழகம்’’ என்று பேசி உற்சாகம் கொடுத்துள்ளார்.
திமுகவில் தற்போது ஸ்டாலினுக்கு அடுத்ததாக உதயநிதிக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. இதனை குறைத்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்
தலைவர் பதவி வேண்டும் என்று கனிமொழி குரல் எழுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்போதே குரல் எழுப்பவில்லை என்றால் தனது அதிகாரம் முழுமையாகப்
போய்விடும் என்று அஞ்சி குரல் கொடுத்திருக்கிறார். ஸ்டாலின் இதனை ஏற்கவில்லை என்றால்
வெளிப்படையாக அதிகாரப் போராட்டத்தை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.
.
