ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன் என்ற அண்ணாமலைக்கு கோவையில் பணம் விநியோகம்..?

தேர்தலில் நின்ற நேரத்தில், ‘நான் என்னுடைய வெற்றிக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன்’ என்று வீரவசனம் பேசினார் அண்ணாமலை. இதை கேட்டு மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘நாங்க தான் அண்ணாமலைக்கு கடந்த தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இந்த நிலையில், கோவையில் வாக்காளர்களுக்கு கொடுத்த பா.ஜ.க. பிரமுகர் வருமான வரித்துறையினரிடம் சிக்கியிருக்கிறார். ஆலந்துறை பா.ஜ.க. மண்டல் தலைவர் ஜோதிமணி வைத்திருந்த 81 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை […]
தமிழ் நியூஸ் நவ் 40 தொகுதிகள் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்

வரும் 19ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக தேர்தல் களத்தில் எந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு எடுத்தோம். அதன்படி இங்கே நிலவரம் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. வெற்றி பெறும் தொகுதிகள் 1. வடசென்னை, 2. தென்சென்னை, 3. மத்திய சென்னை, 4. ஸ்ரீபெரும்புதூர், 5. காஞ்சிபுரம், 6. அரக்கோணம், 7. வேலூர், 8. தர்மபுரி, 9. திருவண்ணாமலை, 10. ஆரணி, 11. கள்ளக்குறிச்சி, 12. சேலம், 13. ஈரோடு, 14. நீலகிரி, […]
தி.மு.க. அலையில் எடப்பாடி, அண்ணாமலை அவுட்… தமிழ் நியூஸ் நவ் 40 தொகுதிகள் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்

இந்தியாவிலே தமிழகத்துக்கு என்று தனித்தன்மை உண்டு. சிந்தித்து வாக்களிக்கும் மக்கள் இருப்பதாலே இந்திய தேர்தல் வெற்றிக்கும் தமிழக தேர்தல் வெற்றிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். இது கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பளீச்சென தெரிந்தது. 2024 தமிழக தேர்தல் களம் வித்தியாசமாக இருக்கிறது. தி.மு.க. அதன் வழக்கமான கூட்டணிக் கட்சிகளுடன் களம் இறங்கியிருக்கிறது. பா.ஜ.க.விடம் இருந்து பிரிந்து வந்திருக்கும் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வும் புதிய தமிழகம் கிருஷ்ணமூர்த்தியும் நிற்கிறார்கள். மீதமுள்ள அத்தனை உதிரிக்கட்சிகளையும் ஒன்றிணைத்து பா.ஜ.க. கூட்டணி […]
தமிழிசை, வானதியுடன் மல்லுக்கட்டும் ஓ.பன்னீர்செல்வம்.. தேர்தலுக்குப் பிறகு புதிய பதவி ரெடி

தமிழக தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்திலும் தேறாது என்பது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளது. ஆகவே, தேர்தல் மிடிவு வெளியானதும் அண்ணாமலை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிடப் போகிறாராம். அந்த பதவியை கைப்பற்ற இப்போதே போட்டி ஆரம்பமாகிவிட்டது. கவர்னராக இருந்து மீண்டும் வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் தமிழிசை செளந்தர்ராஜன் இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார். அதேநேரம், வானதி சீனிவாசனும் கடுமையாகப் போராடி வருகிறார். இவர்கள் இருவரையும் தாண்டி ஒருவர் போட்டியிடுகிறார் என்றால், […]
கடைசி நேரத்தில் சசிகலா கொடுத்த ஆதரவு யாருக்குன்னு தெரியுமா?

கடந்த 2021 தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அமைதியாக இருந்தார் சசிகலா. அதேபோல் இந்த 2024 தேர்தலிலும் நேரடியாக யாருக்கும் ஆதரவு கொடுப்பதாகச் சொல்லவே இல்லை. இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ‘சசிகலாவின் ஆதரவு எங்களுக்குத்தான். பா.ஜ.க.வை ஆதரிக்கிறார்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார். டி.டி.வி. தினகரன் சசிகலா பெயரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் அவரது ஆதரவு தங்களுக்கே உள்ளது என்று பேசிவந்தார். ஆனால், சசிகலா நடத்திவரும் நமது எம்.ஜி.ஆர். […]
அரக்கோணத்தில் பாலு அவுட்..? பண மழை பொழிவதாக அன்புமணி புகார்

அரக்கோணம் தொகுதியில் வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள், முதலியார்கள் மற்றும் நாயுடு சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். தி.மு.க. சார்பில் 4வது முறையாக ஜெகத்ரட்சகனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் ஏ.எல்.விஜயனும் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலுவும் நிற்கிறார்கள். கடந்த தேர்தலில் ஜெகத்ரட்சகன் 6.72 லட்சம் வாக்குகளும் பா.ம.க.வின் ஏ.கே.மூர்த்தி 3.43 லட்சம் வாக்குகளும் பெற்றனர். ஜெக்ரட்சகன் தொகுதிக்கு நிறையவே செய்திருப்பதாகச் சொல்லி வாக்கு கேட்கிறார். மக்களும் அவர் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். இந்த நிலையில் வேட்பாளர் பாலு டெபாசிட் வாங்கவே […]
நான்கு மாஜிக்களுக்கு அர்ச்சனை… பா.ஜ.கவுக்கு எச்சரிக்கை. எடப்பாடி பழனிசாமியின் கடைசிகட்ட பாய்ச்சல்

கடந்த கால சாதனைகளை சுட்டிக்காட்டி அ.தி.மு.க.வினர் சொல்லி வாக்கு சேகரித்துவரும் நிலையில் பா.ஜ.க.வினர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பதைக் கண்டு எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போயிருக்கிறார். எனவே, ஜெயலலிதாவையும் எம்.ஜி.ஆரையும் நினைவூட்டி கடைசி நேரத்தில் கழகத் தொண்டர்களுக்கு ஆவேசக் கடிதம் அனுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதில், ‘கழக உடன்பிறப்புகளே, உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. உங்களுக்காக இங்கே ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாடாளுமன்ற மக்களவையில், புரட்சித் […]
மாமியார் ஆலோசனைப்படி ஸ்டாலினை ஜி.எஸ்.டி. வம்புக்கு இழுக்கும் சரத்குமார்

மக்களுக்காக சேவை செய்வதற்காக அரசியலுக்கு வருபவர்களுக்கு மத்தியில், தன்னை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்று மாமியார் ஆசைப்பட்ட காரணத்துக்காக அரசியலுக்குள் நுழைந்து, அதை பெருமையாகப் பேசியவர் நடிகர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சி இனிமேல் கதைக்கு உதவாது என்று மாமியார் சொன்ன காரணத்தால் கட்சியை அப்படியே பா.ஜ.க.வில் கரைத்துவிட்டார். அடுத்து தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்போது தன்னையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவார்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போக […]
திருமாவளவனை வீழ்த்த பா.ஜ.க. சதி… சிதம்பரம் தொகுதி வெற்றி நிலவரம் எப்படி..?

நாடா மீண்டும் திருமாவளவன் நாடாளுமன்றத் தொகுதியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி அடைந்தார். மோடிக்கு எதிராக தீவிரம் காட்டிவரும் திருமாவளவனை எப்படியும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். அவரது அறிக்கையில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலானது, நமது நாடு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. பாசிச […]
படர்தாமரை உடலுக்கு கேடு! பாஜகவின் தாமரை இந்தியாவுக்கு கேடு!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. அதைத்தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சித் தலைமை, வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர் என அனைத்து தரப்பினரும் வாக்கு சேகரிப்பதில் முழு வீச்சுடல் இறங்கியுள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நிலக்கோட்டை பகுதியில் மக்கள் முன்பு கருணாஸ் பேசும்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் […]

