News

Follow Us

தமிழக தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்திலும் தேறாது என்பது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளது. ஆகவே, தேர்தல் மிடிவு வெளியானதும் அண்ணாமலை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிடப் போகிறாராம்.

அந்த பதவியை கைப்பற்ற இப்போதே போட்டி ஆரம்பமாகிவிட்டது. கவர்னராக இருந்து மீண்டும் வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் தமிழிசை செளந்தர்ராஜன் இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார். அதேநேரம், வானதி சீனிவாசனும் கடுமையாகப் போராடி வருகிறார்.

இவர்கள் இருவரையும் தாண்டி ஒருவர் போட்டியிடுகிறார் என்றால், அது ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வை தன்னுடைய கையில் வாங்கிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் மோடியை ஆதரிக்க முன்வந்தார். ஆனால், அவர்களால் எடப்பாடி பழனிசாமியை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அதனால் சுயேட்சை வேட்பாளராக பன்னீர் போட்டியிடும் சூழலுக்கு ஆளாகியிருக்கிறார்.

எப்படியும் தோற்றுப்போவோம் என்று தெரிந்தே இப்போதே தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு துண்டு போட்டு வைத்திருக்கிறாராம். இதையே அ.தி.மு.க.வின் ஜெயக்குமார், ‘மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் மாநிலத் தலைவராக ஓபிஎஸ் வருவார். டிடிவி தினகரனுக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும். தற்போதைய மாநிலத் தலைவரான அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டு கிளி ஜோசியராகத்தான் வருவார்…’ என்று ஆருடம் கூறியிருக்கிறார்.

நல்லா இருக்குதே இந்த ஆருடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link