Share via:
முதல்வர் விஜய் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர்
அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை
பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளிடம் நலம் விசாரித்து, விவசாயப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது விஜய், தான் அணிந்திருந்த கண்ணாடியை செல்லம் என்ற மூதாட்டிக்கு
பரிசாக வழங்கினார். அப்போது விஜய், ‘’கண்ணாடி போடுங்கம்மா அழகா இருப்பீங்க நீங்க..!’’
என்று அவரது கண்ணாடியை மாட்டினார்.
முதல்வர் விஜயை பார்த்த குஷியில் அவரது கண்ணத்தை கிள்ளி கொஞ்சி
மகிழ்ந்த மூதாட்டி செல்லம் கூறுகையில், “அவர் வந்து என் அருகில் நின்றபோது நான் மிகவும்
ஆச்சரியமடைந்தேன். அவரைப் பார்த்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று அவரிடம் தெரிவித்தேன்.
உடனே அவர் தான் அணிந்திருந்த கண்ணாடியை எனக்கு பரிசாக வழங்கினார்” என்றார்.
இதை வைத்து விஜய்யை எம்.ஜி.ஆரின் மறுபிறவி என்று தவெகவினர் கொண்டாடி
வருகிறார்கள். இது, அதிமுகவினரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. அப்படியே எம்.ஜி.ஆர்.
மாதிரியே செயல்படுகிறார். சிறியவர் முதல் வயதானவர் வரை அனைவரது அன்பையும் விஜய் பெற்றதால்தான்
ஆட்சியில் தொடர்ந்து இருந்தார். அதே பாணியில் விஜய் செயல்படுகிறார் என்று மகிழ்ச்சி
அடைகிறார்கள்.
இன்றைய அதிமுகவினர் எம்.ஜி.ஆரை மறந்துவிட்டதால் தோல்வி அடைந்துவிட்டனர்.
ஆனால், விஜய் எம்.ஜி.ஆரை மறக்கவில்லை என்று பாராட்டவும் செய்கிறார்கள்.
அதேநேரம் எடப்பாடியின் ஆதரவாளர்கள், ‘’எப்பொழுதும் அணையாத அடுப்பு
இருந்த ராமாவரம் ஹோட்டமும் பனையூர் பங்களாவும் ஒன்றா..? எம்.ஜி.ஆர். நிஜமான கொடைவள்ளல்’’
என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
