News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

திருப்பரங்குன்றத்தில் மோடி… அமித் ஷா வார் ரூம் ஸ்கெட்ச்

திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து 2026 தேர்தலை பாஜக எதிர்கொள்ள இருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இதையடுத்தே திருப்பரங்குன்றத்துக்கு பிரதமர் மோடியை வரவழைப்பதற்கு திட்டமிடப்படுகிறது. அதோடு, திருப்பரங்குன்றம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னையில் தனி வீடு அமித்ஷா தங்குவதற்கான வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா போலவே தமிழக ஆளுநர் […]

யார் அந்த கஞ்சா லேடி…? வில்லங்க விவகாரத்தில் சிக்கிய அமைச்சர்

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஜீரோ அளவுக்குக் கொண்டுவந்துள்ளோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகத்திலேயே குத்துவது  போன்று அவ்வர் கஞ்சா வியாபாரியுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது. இது குறித்து பாஜகவினர், ‘’சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் […]

குடியரசு விழாவுக்கு ஜனநாயகன்…? விஜய்க்கு ஆதரவாக ஸ்டாலின்.

காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிவந்தார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் ஸ்டாலினும் சென்சாருக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஜனநாயகனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், ‘’சி.பி.ஐ., ஐ.டி. இ.டி. வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்’’ என்று போட்டுள்ளார். அதேநேரம், விஜய் பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டாம் என்று திட்டமிட்டே ஜனநாயகன் படத்தை தள்ளி வைத்துள்ளார். இந்த […]

எடப்பாடிக்கு அன்புமணி… ஸ்டாலினுக்கு ராமதாஸ்…? தேர்தல் சடுகுடு

விடுதலை சிறுத்தைகள் திமுக பக்கம் இருப்பதால் டாக்டர் ராமதாஸ் அந்த பக்கம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று ராமதாஸ் சர்டிஃபிகேட் கொடுத்திருப்பது அரசியல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருப்பது செல்லவே செல்லாது என்று சொல்லும் டாக்டர் ராமதாஸ், ‘’அன்புமணிக்கு கட்சியின் தலைமை பதவியை கொடுத்தேன். ஆனால் என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு சதி திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு செயல்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தேர்தல் ஆணையம் […]

பிரேமலதாவுக்கு பேரம் பேசும் அதிகாரம்…. கடலூர் மாநாட்டில் சீட்டிங்

ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், இதுவரை பேரம் படியாத காரணத்தால் கூட்டணி அறிவிப்பு இல்லாமல் நழுவிவிட்டார். இந்த முறை விஜய் கட்சியிலும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதால் பேரம் பலமாக இருக்கும் என்கிறார்கள். கடலூர் மாவட்டம், வேப்பூர் மாநாட்டில் பிரேமலதாவுக்கு கிரீடம், வாள் பரிசளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்டு ஆவேசமாகப் பேசினார் பிரேமலதா. அதாவது, ‘’இங்கு வந்திருக்கும் உங்களில் கேப்டனைப் பார்க்கிறேன். […]

எடப்பாடிக்கு பாஜக நெருக்கடி..? நேற்று அமித்ஷா இன்று நயினார்

அமித்ஷாவை சந்தித்துப் பேசி சென்னை திரும்பியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை இன்றைய தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசுவது பரபரப்பாகிவருகிறது. இன்று அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டிருக்கும் இபிஎஸ்க்கு நெருக்கடி தரும் வகையில் பாஜக அவசரம் காட்டுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். நேற்றைய தினம் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் இபிஎஸ். இதையடுத்து பாஜக 60 சீட் கேட்பதாகவும் மூன்று அமைச்சர் பதவி கேட்பதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து பேசிய நயினார், ‘’பாஜக 56 தொகுதிகள், […]

பொங்கல் நோட்டு திமுகவுக்கு ஓட்டு..? திமுக குஷி நிலைக்குமா?

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கொரனா உதவித் தொகை நாலாயிரம் ரூபாய், மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம், பொங்கல் பரிசாக மூன்றாயிரம் என்று ஸ்டாலின் கொடுத்திருப்பதால், இந்த தேர்தலில் மக்கள் திமுகவை கைவிட மாட்டார்கள் என்று நிர்வாகிகள் செம குஷியாக இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த ஸ்டாலின், அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் நெருங்குவதால் கார்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். இந்த வகையில், […]

தினகரனுக்கு எடப்பாடி பச்சைக் கொடி. சசி, பன்னீர் அவுட்

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று அழுத்தம்திருத்தமாக கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுக்கு பச்சைக் கொடி காட்டியிருப்பதாக டெல்லி செய்தி தெரிவிக்கிறது. அமித்சாவை சந்தித்தபிறகு இன்று காலை எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ’’அரசு ஊழியர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் திமுக அரசு ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இன்றைக்கு மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த […]

நேருவை காப்பாற்றுவாரா ஸ்டாலின்..? தேர்தலுக்கு ஜெயில்

அமைச்சர் நேரு பணி நியமன ஆணைகளில் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம் சாட்டி தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்டாலின், அதிமுக வழக்குப் பதிவு செய்ததும் அலறிப்போய் உத்தரவு கொடுத்திருக்கிறார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறையால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களுக்காக அமைச்சர் கே.என். நேரு தனது உறவினர்கள் மூலம் 1,020 கோடி ரூபாய் வரை லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் வாங்கியிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. […]

தேர்தலுக்கு ஜனநாயகன்… அமித் ஷாவுக்கு விஜய் எச்சரிக்கை…?

அரசியல் மீட்டிங்கை தடுத்து நிறுத்த முயற்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு மேடையிலே ஸ்டாலின் அங்கிள் என்று மிரட்டல் விடுத்தார் விஜய். இப்போது ஜனநாயகன் படத்தை திட்டமிட்டு தள்ளி வைத்திருக்கும் அமித்ஷாவுக்கு மேடையில் எப்படி எச்சரிக்கை செய்வாரோ என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ‘’எங்கள் அன்பிற்குரிய ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக […]