விவசாயிகள், ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி. சட்டசபையில் விஜய் அதகளம்

சட்டசபையில் அவ்வப்போது 110 விதியின் கீழ் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்வர் விஜய் செய்துவருகிறார். அந்த வகையில் இன்றைய அறிவிப்பு நியாயமான காரணங்களுக்காக போராடி வழக்குகளை சந்தித்திருக்கும் ஆசிரியர் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது. இன்றைய அறிவிப்பில் முதல்வர் விஜய், ‘’ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்கள் (ஆர்.சி) அன்றைய தினமே வழங்கப்படும். இனிமேல் புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் ஆர்.சி -யை இணைய தளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அரசு […]
மோடிக்கு முடிவுரை எழுதுவார் விஜய்..? இந்தியா முழுக்க பரபரப்பு

மோடியை ராகுல்காந்தியால் வீழ்த்தவே முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், காக்ரோச் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்தது. அதற்குள் அந்த கட்சிக்குள் எக்கச்சக்க முரண்பாடுகள். இந்த நிலையில் விஜய் அடுத்த பிரதமர் என்று இந்தியா முழுக்க குரல் கேட்கிறது. இன்று சட்டசபைக்கு வந்த கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கனிமொழி, ‘’2029 பிரதமர் வேட்பாளர் நம்ம தளபதி விஜய் தான்.. ராகுல் காந்தி தான் நம்ம தலைவர் கைய பிடிச்சு கூட்டிட்டு போய் பிரதமர் சீட்ல […]
விஜய் காவிரிக்கு மரியாதை… மலர் தூவி மேட்டூர் அணை திறப்பு

தமிழர்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வேட்டி, சட்டை அணிந்து, முதல்வர் விஜய் பவ்யமாக இறைவனை கைகூப்பி வணங்கி விட்டு, மலர் தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதையடுத்து மேட்டூர் டேம் போட்டோ லைப்ரரியில் வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்டார். மின்சாரநிலையத்தையும் பார்வையிட்டார். தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம் போதிய நீர் கையிருப்பு இல்லை என்பதால் இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. […]
முதல்வர் விஜய் முதல் வெளிநாட்டு பயணம். எவ்வளவு முதலீடு..?

முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டன் நாட்டுக்குப் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விஜய் தலைமையிலான தவெக அரசு சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2026’ நடத்தியது. இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் (2036) 1.5 ட்ரில்லியன் டாலர் […]
பொன்னியின் புதல்வனே வருக… விஜய்க்கு அட்டகாச வரவேற்பு

Welcome, son of Ponni… A grand welcome for Vijay.
விஜயபாஸ்கருக்கு கெட் அவுட்…? தவெகவில் தடுமாற்றம்

தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகியிருக்கும் சி.விஜயபாஸ்கருக்கு கெட் அவுட் சொல்லும் மூடில் முதல்வர் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக போன்று வாஷிங் மெஷின் என்ற பேர் வாங்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு, முக்கிய இடம் பிடித்திருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு […]
ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ். அரசு செலவைக் குறைக்கும் விஜய்..?.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு பதிலாக, இனி ஒரு எஸ்.ஐ. தலைமையில் தமிழக போலீசார் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு அளிக்க உள்ளனர். அரசு செலவினங்கள் அதிகம் என்பதாலே இந்த நடவடிக்கைய விஜய் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது . இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’இசட் வகை பாதுகாப்பு என்பது ஒருவர் என்ன பதவியில் இருக்கார்னு பார்த்து முடிவு செய்வது அல்ல. அவரது முக்கியத்துவம், […]
ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம்..? அமைச்சர் அறிவிப்புக்கு வரவேற்பு

நீண்ட காலமாக ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் போராடி வருகிறது. விஜய் ஆட்சியில் அதற்கு தீர்வு தென்படுகிறது. விரைவில் ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கெளசல்யா சங்கர், ‘’ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்படும் என தோழர் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் தவெக அரசின் சார்பாக அறிவித்திருக்கிறார் . இவ்வறிவிப்பை வரவேற்கிறேன். எனது மகிழ்ச்சியை எல்லோரிடமும் […]
திமுகவில் திகுதிகு மாற்றங்கள். எத்தனை மா.செ.வுக்கு ஆபத்து?

திமுகவில் இப்போது 77 மாவட்டக் கழகங்கள் உள்ளன. இதை 110 மாவட்டக் கழகங்களாக மாற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று உடன்பிறப்புகள் குஷியாகியுள்ளனர். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? காலத்தின் […]
பரந்தூருக்கு அடுத்து ஸ்போர்ட்ஸ் சிட்டி அவுட். இதுதான் மாற்றமா..?

பரந்தூர் விமான நிலையம் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது போன்று, செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான திமுக கொண்டுவந்த குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது தவெக அரசு. 261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு மையம், சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர் விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து திமுக அரசு திட்டமிட்டு வேலை தொடங்கியிருந்தது. ஜேப்பியார் […]

