எடப்பாடிக்கு நாயடி பேயடி. இப்படி வரம்பு மீறி பேசலாமா..?

நேற்றைய தினம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்து அநாகரிகமாகப் பேசினார். தாய், தந்தை, மனைவி, பிள்ளையுடன் வாழாத ஒருவருக்கு குடும்பத்தின் அருமை எப்படி தெரியும்..? அவர் தாய்மாமனா என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் தவெகவினரை சூடாக்கிவிட்டது. இதையடுத்து தவெகவின் அதிகாரபூர்வ ஐ.டி.விங் எடப்பாடி பழனிசாமியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டது. அந்த அறிக்கையில், ‘’வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள […]
தாய் மாமன் மோதிரத்தில் மத நல்லிணக்கம். விஜய்க்கு குவியும் பாராட்டு

இன்று மதுரையில் தொடங்கப்பட்ட தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் விஜய் நடந்துகொண்ட செயல், தமிழக மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு முதல் தங்க மோதிரங்களை வழங்கினார். யாழினி, முகமது சைனிஷா மற்றும் ஜோனல் ஆகிய மூன்று பிள்ளைகள் இந்த மோதிரங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த மூன்று பேரும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ […]
லவ் யூ விஜய் மாமா… செல்ஃபி. மக்கள் வெள்ளத்தில் மதுரை விஜய்

தாய் மாமன் திட்டத்தைத் தொடங்கிவைக்க வரும் விஜய்க்கு மதுரையே குலுங்கும் அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தனி விமானத்தில் மதுரைக்கு வந்த விஜய் ரோடு ஷோவாக வந்தார். சாலையின் இரண்டு பக்கமும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று விஜய்க்கு வரவேற்பு கொடுத்தார்கள். அதனால் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த முதல்வர் விஜய்யைப் பார்த்ததும் சாலையில் தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்ப்பரித்தார்கள். வரும் வழியில் மதுரை மீனாட்சி அம்மன் வேடமணிந்த சிறுமியைப் பார்த்ததும் வேனை நிறுத்தி, அந்த குழந்தையைத் தூக்கி கொஞ்சினார் […]
ஜெய் காளி உதயநிதிக்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு. ஆதவ் அர்ஜூனா சவால்

இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஆபாச வார்த்தைகள் பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் காளி பற்றிய பேச்சுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நேற்று இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த உதயநிதி, ‘’தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் ! ஜெய்காளி ஓம்காளி விஜய் ஒரு ஓடுகாலி. இரண்டு தொகுதியிலும் டெபாசிட் காலி’’ […]
தாய்மாமன் விஜய்க்கு செம வரவேற்பு. விழா கோலத்தில் மதுரை

தாய்மாமன் சீராக, தங்கமோதிரம் தந்திடும் விழாவுக்கு வருகை தரும் விஜய்யை வரவேற்பதற்கு மதுரையே விழா கோலத்திற்கு மாறியிருக்கிறது. காலை முதல் மதுரையில் பாட்டன், பாட்டி தொடங்கி பேரக்குழந்தை வரை விஜய்க்காக காத்திருக்க்றார்கள். மதுரை விமான நிலையம் முதல் கோரிப்பாளையம், மீனாட்சியம்மன் கோவில். வரை 16 கிலோ மீட்டர் சாலைகளின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை நீர் வடிகால் செல்லும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தொண்டர்கள் வரிசையில் நின்று பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவெக […]
உதயநிதியின் ஆபாச பிரசாரம்… செம கடுப்பில் பெண்கள்

இடைத்தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கொச்சையாகவும் ஆபாசமாகவும் பேசிய உதயநிதி என்ற ஆபாசநிதியை விஜய் ரசிகர்கள் பொளந்து கட்டுகிறார்கள். வீட்டுக்கு எதிரே பீச் இருக்கணுமாம், அப்பத்தான் மூடு வருமாம், தண்ணி வரலேன்னு சொன்னதுக்கே என் மேல கேஸ் போட்டாங்க என்று இரட்டை அர்த்தத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார். இதைக் கேட்டு அவரது பெண் வேட்பாளரே தலை குனிந்து நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. உதயநிதியின் ஆபாச பேச்சுக்கு தவெக, ‘’எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா? பரம்பரை பரம்பரையாகக் […]
கரூர் பெரும்துயரம். ஓராண்டு நினைவு நாளில் விஜய் உருக்கம்

கரூர் பெருந்துயரம் நடந்து இன்றோடு ஓராண்டாகிறது. அண்ணன் விஜய்யை ஆர்வமாகப் பார்க்கவந்து 41 அப்பாவி உயிர்கள் இந்த மண்ணை விட்டு சென்ற கருநாள். இன்றைய நாளுக்கு முதல்வர் விஜய் மனப்பூர்வமாக அஞ்சலி தெரிவித்திருக்கிறார். இன்றைய அறிக்கையில் விஜய், ‘’என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான […]
அதிமுக புள்ளிகளுக்கு பதவிகள் அள்ளிக்கொடுத்த விஜய்… மீண்டும் படையெடுப்பு.?

அதிமுகவில் இருந்து தவெக வந்தவர்களில் பெரும்பாலோருக்கு கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார் விஜய். அதிமுகவும் தவெகவும் ஒன்று இரட்டை இலையும் விசிலும் ஒன்று என தொடர்ச்சியாக தவெகவில் ஒரு அணியினர் மட்டும் தொடர்ச்சியாக சொல்லி வருவதை உண்மையாக்கும் வகையில் இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், கட்சியில் இணைந்தவுடனே சி.மகேந்திரனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. பொள்ளாச்சி முன்னாள் எம்.பி.யும், மடத்துக்குளம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வான சி மகேந்திரன் த.வெ.க.வில் நேற்றுதான் இணைந்தார். இணைந்த கையோடு […]
மதுரைக்கு வரும் தாய்மாமன். விஜய்க்கு பலமான வரவேற்பு

வரும் 28ம் தேதி மதுரைக்குச் செல்லும் முதல்வர் விஜய், ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைக்க இருக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் தயாராவதாக சொல்லப்படுகிறது. தவெகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி தொடங்க போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் உசிலம்பட்டியில் வைத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உசிலம்பட்டியில் பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாச்சாரம் […]
விஜய் வர்றார் ஒதுங்கு ஒதுங்கு. களம் மாறும் இடைத்தேர்தல் நிலவரம்

இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவினர் போட்டி போட்டு வேலை செய்துவருகிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் ஓட விடுவதற்கு விஜய் வருகிறார். மதுராந்தகம் தொகுதியில் நாளையும் தாராபுரம் தொகுதியில் 30ம் தேதியும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து கள நிலவரம் மாறிவிடும் என்கிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது. குறைந்த நாட்களில் தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை முதலமைச்சர் விஜய் கொடுத்திருப்பதாக கூறி தமிழ் மாநில காங்கிரஸ் […]

