News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கரூர் பெருந்துயரம் நடந்து இன்றோடு ஓராண்டாகிறது. அண்ணன் விஜய்யை ஆர்வமாகப் பார்க்கவந்து 41 அப்பாவி உயிர்கள் இந்த மண்ணை விட்டு சென்ற கருநாள். இன்றைய நாளுக்கு முதல்வர் விஜய் மனப்பூர்வமாக அஞ்சலி தெரிவித்திருக்கிறார்.

இன்றைய அறிக்கையில் விஜய், ‘’என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘’கரூரில் நம் குடும்பங்களை இழந்த துயரின் நினைவு நாள் இன்று. அன்பையும் பாசத்தையும் தவிர வேறொன்றும் அறியாத நம் உறவுகளைப் பிரிந்த வலி, வாழ்க்கை முழுவதும் தீராது. நம் இதய உறவுகளை இழந்து, வாழ்நாள் காணாத வேதனையையும் தவிப்பையும் சுமந்துகொண்டிருக்கிறோம். நமது அன்பு சொந்தங்களுக்கு ஆதரவாகவும் அரணாகவும் எப்போதும் நாம் இருப்போம். கரூர் பெருந்துயரின் நினைவுகளை உள்ளத்தில் ஏந்துவோம்.’’ என்று கூறியிருக்கிறார்.

கரூர் துயரம் நடந்து ஒரு வருடம் கடந்தாலும், அந்த சோகம் நம் மனதை விட்டு அகலவில்லை. நம் சொந்தங்கள்,  ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பச்சிளம் பிஞ்சுகள் என்று எத்தனை கனவுகளோடு வந்தவர்கள், ஒரு நொடியில் நம்மை விட்டு பிரிந்த அந்த வலி.  வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை. அந்த குடும்பங்களின் கண்ணீருக்கு காலம் கூட ஆறுதல் சொல்ல முடியாது.இழந்த உயிர்களை மீட்டுத் தர முடியாது.

ஆனால்  இந்த விபத்துக்குக் காரணமானவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர முடியும். விஜய் பெற்றுத்தருவார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link