Share via:
அதிமுகவில் இருந்து தவெக வந்தவர்களில் பெரும்பாலோருக்கு கட்சியில்
துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார் விஜய். அதிமுகவும் தவெகவும் ஒன்று இரட்டை
இலையும் விசிலும் ஒன்று என தொடர்ச்சியாக தவெகவில் ஒரு அணியினர் மட்டும் தொடர்ச்சியாக
சொல்லி வருவதை உண்மையாக்கும் வகையில் இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், கட்சியில் இணைந்தவுடனே சி.மகேந்திரனுக்கு மாவட்டச் செயலாளர்
பதவி கிடைத்துள்ளது. பொள்ளாச்சி முன்னாள் எம்.பி.யும், மடத்துக்குளம் முன்னாள் அதிமுக
எம்.எல்.ஏ.வான சி மகேந்திரன் த.வெ.க.வில் நேற்றுதான் இணைந்தார். இணைந்த கையோடு அவருக்கு
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதோடு, த.வெ.க கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 15 புதிய துணைப்
பொதுச் செயலாளர்கள் நியமித்து விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த
புதிய நியமனங்களில் பெரும்பான்மையாக அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது
தமிழக அரசியல் களத்தில் பெரும் சுவாரஸ்யத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி 15 புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் இவர்கள்தான்.
1. எம்.எஸ்.எம்.
ஆனந்தன் (முன்னாள் அமைச்சர், திருப்பூர் வடக்கு)
2. எம்.சி.சம்பத் (முன்னாள் அமைச்சர், கடலூர்)
3. கே.இராதாகிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர், உடுமலைப்பேட்டை)
4. கே.வி.இராமலிங்கம் (முன்னாள் அமைச்சர், ஈரோடு மேற்கு)
5. எம்.ஆனந்தன் (முன்னாள் அமைச்சர், உளுந்தூர்பேட்டை)
6. கடம்பூர் ராஜு (முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி)
7. கே.டி.பச்சைமால் (முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி)
8. வெல்லமண்டி என்.நடராஜன் (முன்னாள் அமைச்சர், திருச்சி கிழக்கு)
9. என்.ஆர்.சிவபதி (முன்னாள் அமைச்சர், முசிறி)
10. வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர், விருதுநகர்)
11. எஸ்.வளர்மதி (முன்னாள் அமைச்சர், ஸ்ரீரங்கம்)
12. டாக்டர் ஜே. சந்தீப் ஆனந்த்
13. கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் (திருப்பூர்)
14. தொள்ளமூர் கண்ணன் (விழுப்புரம்)
15. வி.சி.ஆர்.குமரன் (திருவள்ளூர்)
புதிய நிர்வாகிகள் அனைவரும் த.வெ.க தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலின்படியும்,
பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் ஆலோசனையின்படியும் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளுடன் இணைந்து
கழகப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், கழகத் தோழர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு
நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் இடைத்தேர்தலில்
பிரசாரம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, மீண்டும் அதிமுகவினர்
விஜய்யை தேடி வருவார்கள் என்று நினைக்கிறார்கள்.

