News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வரும் 28ம் தேதி மதுரைக்குச் செல்லும் முதல்வர் விஜய், ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைக்க இருக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் தயாராவதாக சொல்லப்படுகிறது.

தவெகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி தொடங்க போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் உசிலம்பட்டியில் வைத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

உசிலம்பட்டியில் பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாச்சாரம் அதிகம் நடக்கும் பகுதியாக இருப்பதால் அதனால் இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் இருந்து துவங்கலாம் என நினைத்த அரசு அதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட்டது. உசிலம்பட்டியில் அதிகளவிலான தெருக்கள் குறுகலாக இருப்பதால் முதல்வர் விஜய்யை காண வரும் கூட்டத்தை கட்டுபடுத்துவது சிரமமாகி விடும் என்பதால் மதுரையில் வைத்து தொடங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு அரசு தரப்பில் முடிவெடுக்கபட்டுள்ளது.

மதுரைக்கு வரும் முதலமைச்சர் விஜய் ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கு குழந்தைகளுக்கு நேரடியாக சென்று தங்க மோதிரம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி ராஜாஜி மருத்துவமனையில் சுற்றிலும் சாலைகள் அமைக்கு பணிகள் வேகமடைந்துள்ளன. அப்படியே அத்தனை சாலைகளையும் சரிசெய்யுங்கள் என்று மக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link