News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நேற்றைய தினம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்து அநாகரிகமாகப் பேசினார். தாய், தந்தை, மனைவி, பிள்ளையுடன் வாழாத ஒருவருக்கு குடும்பத்தின் அருமை எப்படி தெரியும்..? அவர் தாய்மாமனா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தவெகவினரை சூடாக்கிவிட்டது. இதையடுத்து தவெகவின் அதிகாரபூர்வ ஐ.டி.விங் எடப்பாடி பழனிசாமியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டது. அந்த அறிக்கையில், ‘’வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை இடர்ப்பாடி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்.

நன்றி மறப்பது, நம்பியவர்களை முதுகில் குத்துவது,நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்ப சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது என தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கி உள்ளார்.

கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.

திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனால்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார். தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி.’’ என்று வெளுத்து வாங்கியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link