News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இன்று மதுரையில் தொடங்கப்பட்ட தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் விஜய் நடந்துகொண்ட செயல், தமிழக மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு முதல் தங்க மோதிரங்களை வழங்கினார். யாழினி, முகமது சைனிஷா மற்றும் ஜோனல் ஆகிய மூன்று பிள்ளைகள் இந்த மோதிரங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த மூன்று பேரும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுட்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த தாய்மார்கள் கையில் மோதிரத்தை வழங்கினார். அப்போது சில பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கும் மோதிரத்தை முதல்வரே கையில் மாட்டிவிடும்படி கேட்டுக் கொண்டனர். அவர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில் அக்குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் கைகளிலேயே மோதிரத்தை மாட்டிவிட்டார்.

சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி அன்போடு கேட்டனர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்கள் குழந்தைகளை கையில் தூக்கி வைத்து கொஞ்சியதோடு பெயர் சூட்டினார். அப்போது ஒரு பெண், உணர்ச்சி பெருக்கத்தில் தனது குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வரைப் பார்த்து அழுதார். அந்தப் பெண்ணை முதல்வர் விஜய் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்தினார்.

கடைசியாக முதல்வர் விஜய், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பயனடைந்த தாய்மார்கள், அவர்கள் குழந்தைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதல்வர் கையில் வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். புகைப்படம் எடுத்து முடித்தும், அனைத்து தாய்மார்களுடன் முதல்வர் விஜய் ‘செல்ஃபி’ புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

‘’சித்திரைத் திருழாவில் தங்கைக்காக அண்ணன் சீர் சுமந்து வரும் பாசப் பூமியில் தாய்மாமன் தங்க மோதிரம் பாசத்திட்டம் தொடங்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்” என்று அமைச்சர் அருண்ராஜ் கூறி பலத்த கைதட்டல் வாங்கினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link