News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் இன்று ஆந்திரா பயணம் செய்கிறார். விஜய்க்கு செமையான வரவேற்பு காத்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

ஆந்திரா இதுவரை வழங்கவேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. அதோடு கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து விவாதிக்கவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் தமிழ்நாடு முதல்வர் விஜய்.  இந்த நதி இணைப்பு திட்டத்தை மட்டும் முதல்வர் விஜய் செயல்படுத்திவிட்டால், வரலாற்றில் இன்னொரு பெரிய இடத்தை அவர் பெறுவார்.

 

தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 12 டி.எம்.சி தண்ணீரை ஆந்திர அரசு தர வேண்டும். ஆனால், இந்த மாதம் இதுவரையில் 2.25 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கொடுத்திருக்கிறது ஆந்திர அரசு. எனவே இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆந்திர அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்த முதல்வர் விஜய், இன்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆந்திராவுக்குப் புறப்படுகிறார்.

அங்குள்ள கன்னவரம் விமான நிலையத்துக்கு மாலை 3.30 மணியளவில் சென்றடையும் அவர், மாலை 4.15 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும் பங்கேற்கிறார். இரு மாநிலங்களுக்கும் இடையேயான நதிநீர் பங்கீடு, நதிநீர் இணைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அணைகள் கட்டுவது தொடர்பான விவகாரங்கள் இந்தச் சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன.

இந்தப் பயணத்தின்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அம்மாநில அமைச்சர்களையும் முதல்வர் விஜய் சந்திக்கிறார். அப்போதும் இரு மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய நதிநீர் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலுக்குச் சென்று முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதன் பிறகு விமானம் மூலம் சென்னை திரும்பும் அவர், இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்கான தண்ணீர் விநியோகம், நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் அணைகள் தொடர்பான கவலைகள் எனப் பல முக்கிய விவகாரங்கள் இந்தப் பயணத்தில் இடம்பெறுவதால், சந்திரபாபு நாயுடுவுடனான பேச்சுவார்த்தை கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து தவெக மணி, ‘’எப்படியாவது நதிநீர் இணைப்பைச் சாத்தியமாக்குங்கள். நீர்நிலைகளைப் பாதுகாத்து, தூர்வாரிப் புதுப்பித்து, நீர்வளத்தைப் பெருக்குங்கள். நதிகள் இணைந்தால் நீர்வளம் பெருகும்! நீர்நிலைகள் நிறைந்தால் நிலம் செழிக்கும்! நிலம் செழித்தால் வேளாண்மை தழைக்கும்! வேளாண்மை தழைத்தால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும். நீர்நிலைகளில் மிதக்கும் சூரிய மின்தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்புகளை ஆராயுங்கள். நீர்மின் திட்டங்களை மேம்படுத்துங்கள். புதிய அணைகளைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, இயற்கைக்கும் மக்களுக்கும் உகந்த இடங்களில், குறைந்தது ஓர் அணையையாவது கட்டி முடிக்க வழிவகை செய்யுங்கள்.

இது ஒரு தலைமுறைக்கான திட்டமல்ல. பல தலைமுறைகள் பயன்பெற வேண்டிய வரலாற்றுக் கடமை. தமிழகம் உள்ளவரை, தமிழர் நெஞ்சங்களில் உங்கள் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுவும், தமிழ்நாட்டின் நீர்வளத்தை மீட்டெடுத்து, உழவர் வாழ்வை உயர்த்தி, வறட்சியற்ற வளமான தமிழகத்தை உருவாக்கிய தலைவராக உங்கள் பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link