News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இன்று பெண் குழந்தைகள் நாளையொட்டி வாழ்த்து தெரிவித்திருக்கும் முதல்வர் விஜய், குழந்தைகள் தினவிழாவையொட்டி கேக் வழங்கிக் கொடுக்க உத்தரவு போட்டிருக்கிறார்.

இன்றைய தினம் விஜய், ‘’பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்’’ என்று கூறியிருந்தேர்.

அதேபோல், குழந்தைகள் தினத்தை (நவம்பர் 14) கொண்டாடும் வகையில் அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரம்மாண்டமான இனிப்பு விருந்துக்கு தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள டெண்டர் விவரப்படி, சுமார் 61.84 லட்சம் மாணவர்களுக்கு பிராண்டட் ஸ்பாஞ்ச் ஸ்லைஸ் கேக் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம். தனித்தனி கவரில் பேக் செய்யப்பட்டிருக்கும்.

நான்கு வகையான கேக். அதாவது மிக்ஸட் ஃப்ரூட், டூட்டி ஃப்ரூட்டி, கிளாசிக் வெண்ணிலா, ரிச் சாக்லேட் பட்டர் ஆகிய நான்கு சுவைகள். அதோடு, கேக் மென்மையாக, பஞ்சு போல் இருக்க வேண்டும். பூஞ்சை, கெட்ட வாடை இருக்கக் கூடாது. தடை செய்யப்பட்ட கலர்கள் அறவே கூடாது.

நவம்பர் 14 அன்று குடோனுக்கு வரும்போதே இன்னும் 30 நாட்களுக்கு கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கவரிலும் பிராண்ட் பெயர், சுவை, நம்பர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் அரசின் லோகோ இடம்பெறும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு சுவையிலும் சாம்பிள் கேக் கொடுத்து தரச்சான்றிதழ் பெற வேண்டும் என அரசு கறாராக உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கேக் வழங்கப்படும்.

நேரு மாமாவுக்கு அடுத்து குழந்தைகளுக்கு விஜய்தான் மாமா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link