News

Follow Us

மக்களவைத் தேர்தல் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜக.வில் இருந்து வந்து சேர்ந்திருக்கும் வீரப்பன் மகள் வித்யா ராணியை அறிமுகம் செய்திருப்பது சீமான் தம்பிகளை சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது.

நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். பாத்திமா பர்ஹானா தான் மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பல் மருத்துவர் கார்த்திகேயனை அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் கிருஷ்ணகிரி தொகுதி நா.த.க வேட்பாளராக சந்தன வீரப்பன் மகள் வித்யாராணியை அறிமுகம் செய்துவைத்தார். சீமான். வீரப்பனின் மூத்த மகள் வித்யா, 4 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது, அவருக்கு ஓ.பி.சி அணியின் மாநிலத் துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், வீரப்பன் மகள் வித்யாராணி சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தவுடன் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராகியுள்ளார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் தான் சமூகப் பிரதிநிதித்துவம் சூப்பர் என்று அவரது வேட்பாளர்களின் ஜாதியை பட்டியல் போட்டிஉர்க்கிறார்கள். அகமுடையார் 2 இஸ்லாமியர் 2 உடையார் 2 கவுண்டர் 6 கள்ளர் 2 கோனார் 2 நாடார் 2 தேவேந்திர குல வேளாளர் 3 பறையர் 6 மறவர் 2 மீனவர் 2 முதலியார் 1 வன்னியர் 6 வெள்ளாளர் 1 முத்தரையர் 1 என 40 தொகுக்கு ஜாதி ரீதியில் ஆட்கள் ஒதுக்கப்பட்டுளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link