News

Follow Us

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெளிப்படையாக இஸ்லாம் மதத்தையும் காங்கிரஸ் கட்சியையும் தொடர்புபடுத்தி பிரதமர் மோடி பேசியிருக்கும் விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறினார்கள். இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு, ஊடுருவல் செய்பவர்களுக்கு விநியோகிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. சகோதர சகோதரிகளே, இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை எனது தாய் மற்றும் சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது.

அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி பொய்களைப் பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் காங்கிரஸ் அச்சத்தை உருவாக்குகிறது.

சில நேரங்களில் அவர்கள் பழங்குடியினர் அல்லது தலித்துகள் அல்லது சிறுபான்மையினரிடம் அச்சத்தை உருவாக்குகிறார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் சாசனம் அல்லது இடஒதுக்கீடு குறித்த பொய்களைப் பரப்பி வருகின்றனர். பழங்குடியினர் தங்கள் உரிமைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள் என்பதால், அவர்களின் பொய்கள் வேலை செய்யாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று

தேசபக்தி நிறைந்த ராஜஸ்தானுக்கு காங்கிரஸால் ஒருபோதும் வலிமையான பாரதத்தை உருவாக்க முடியாது என்பது தெரியும். காங்கிரஸ் ஆட்சியை நாடு விரும்பவில்லை. 2014-க்கு முந்தைய நிலை திரும்புவதை நாடு விரும்பவில்லை. பலவீனமான காங்கிரஸ் அரசை அனைவரும் மிரட்டி, நாட்டைக் கொள்ளையடிப்பதில் மும்முரமாக இருந்தனர். பிரதமரை யாரும் கேட்கக்கூட இல்லை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அரசு இயங்கி வந்தது,” என்று பேசியிருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தில் ஜாதி, மதத்தை பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் கமிஷனும் நீதிமன்றமும் கூறியிருக்கும் நிலையில், மோடி நேரடியாக காங்கிரஸ் கட்சியையும் இஸ்லாம் மதத்தவர்களையும் பேசியிருப்பது குறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தேர்தல் கமிஷன் வாயைத் திறக்கவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link