News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட விருப்மேற்பார்வையில் நடந்த மக்கள் நலப்பணியிலே துணிந்து கையை வைத்த பொறியாளரை எப்படிய்யா இப்படி என்று ஆச்சயர்த்தில் உறைந்து போயுள்ளது பொதுப்பணி துறை பொறியாளர்கள் .

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் அதிகமான அளவு மழை பெய்ததன் செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தது. இதன் காரணமாக சென்னை நகரமே மூழ்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது ஒரே நேர்த்தில் 20 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதே சென்னை நகரத்தில் வெள்ளம் ஏற்பட காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. மூன்று தினங்களுக்கு பிறகு தான் வெள்ள நீர் சென்னையில் நகரப்பகுதியில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக மக்கள் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு பயங்கர கெட்ட பெயரை உண்டாக்கியதோடு ஒட்டு மொத்த சென்னை மக்களின் சாபத்தையும் அதிமுக அரசு வாங்கிக் கொண்டது. 2021 சட்ட மன்ற தேர்தலில் சென்னை முழுவதுமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பும் ஒரு காரணமாக அமைந்தது.இந்த நிலையில் ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 2021 மழை காலத்தில் நேராக செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டதோடு அதனை தூர்வாறும் வேலையையும் போர்க்கால நடவடிக்கை கீழ் செய்யச் சொன்னார். வேலையும் ஆரம்பம் ஆனது ஆனால் அதிலையும் ஒரு கறுப்பு ஆடு கையை வைக்க நிலைமை முதல்வர் அலுவலகம் வரை சென்றுள்ளது.

இது குறித்து பேசிய முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவர்:

செம்பரம்பாக்கம் ஏரியை வைத்து கோடியில் புரளும் அதிகாரி கடந்த 2015 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை கால கட்டமான டிசம்பர் மாதம் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் சென்னை மாநகர மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. அதன் பிறகு ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையும் போது செம்பரம்பாக்கம் ஏறிய திறந்து விடுவார்களோ என்கிற பயம் மக்கள் மத்தியில் உள்ளது . இதனால் அடுத்து வரும் ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயந்து பயந்து மேற்கொண்டு பிரச்சனை மீண்டும் வராமல் அதிமுக ஆட்சியில் பார்த்துக் கொண்டார்கள். என் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது. வடகிழக்கு பருவமழை காலகட்டத்தின் போது முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் களத்தில் இறங்கினார். செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வுசெய்த முதல்வர், உடனடியாக ஏரியைத் தூர்வார உத்தரவிட்டார். இதற்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை ஒரே நிறுவனத்துக்கே ஒதுக்கினார்களாம். ஆனால், நான்கு நிறுவனங்கள் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் கணக்கெழுதி இருக்கிறார்களாம். அதனால் ஒப்பந்தத்தை எடுத்துச் செய்த நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் மட்டுமே தந்தார்களாம்.

மீதி எங்கு போனது என்று தெரியாத நிலையில், முறையாக தூர்வாரும் பணியை எடுத்துச்செய்த நிறுவனம் இந்த விஷயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு நல்ல முயற்சி செய்ததாம். ஆனால் பவர்ஃபுல் அதிகாரியால் நமக்கு டெண்டர் கிடைக்காது என்கிற பயத்தில் அந்த நிறுவனம் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி அனைத்து பணத்தையும் வாரி சுருட்டி கொண்டு இருக்கிறார் . தற்போது அவர் மேற்பார்வை பொறியாளர் பணியிட உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் அந்த முக்கியமான பணியிடத்தை பிடித்து விட்டால் கோடிகளில் புரளலாம் என்கிற எண்ணம் அந்த அதிகாரிக்கு உள்ளது. அவர் இடத்துக்கு வந்தால் வரும் ஆண்டுகளில் பெய்யும் மழை நீரில் சென்னை முழ்குவது நிச்சயம். இது போன்ற அதிகாரிகளுக்கு இந்த பணியிடத்தை ஒதுக்காமல் பார்த்துக் கொள்வதே சென்னை மக்களுக்கு இந்த அரசு செய்யும் நன்றி கடனாக இருக்கும். அதே நேரத்தில் இவ்வளவு பெரிய முறைகேடு செய்த அந்த அதிகாரி மீது விசாரணை நடத்தினால் இன்னும் பல உண்மைகள் வெளிய வரும் ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link