Share via:
வார இறுதியில் உல்லாச விடுதியில் உற்சாகமாக இருக்க கால்கேள் பெண்களை சப்ளை செய்யச் சொல்வதாக சீனியர் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் மீது பகீர் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள சம்பவம் கோட்டை வட்டாரத்தை சலசலப்பை உண்டாக்கியுள்ளது.பொதுப்பணித் துறையில் நீர்வளத்துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் மீது படுக்கைக்கு சேவை செய்ய பெண்களை அனுப்பச் சொல்லி வற்புறுத்துவதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய மூத்த பொறியாளர் ஒருவர் குட்டி முதல் புட்டி வரை ஏற்பாடு செய்ய சொல்லும் அதிகாரியால் அதிர்ச்சியில் நீர்வளத் துறை உள்ளது.
அதில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயலாளர் கட்டுப்பாட்டிற்கு இதுதான் செயல்பட்டு வருகிறது. இதற்காக தலைமைச் செயலகத்தில் செயலாளர் மற்றும் அவருக்கு கீழ் உள்ள பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .செயலாளரை பொறுத்தவரையில் நிர்வாக பணி என்றாலும் ஒவ்வொரு அரசு திட்டங்களையும் கண்காணிக்கும் பணியிடம் ஈடுபட அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. எனவே செயலாளர் ஆய்வு பணி காரணமாக வெளியூர் சென்றாலோ அல்லது அவர் எங்கு சென்றாலும் அதற்கான செலவு அந்த துறைகள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நீர்வளத்துறையில் உயர் அதிகாரி ஆய்வு பணிக்கு சென்றால் அதிகாரிகள் தான் செலவு செய்ய வேண்டி உள்ளது. வாரத்துக்கு ஒரு முறை அவருக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் ஓய்வெடுக்க அறை புக்கிங் செய்ய வேண்டியுள்ளது.
இதற்காக ஆகும் தலைமை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குட்டி முதல் புட்டி வரை அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இதுவரையில் சாப்பாடு மட்டும் தங்கும் செலவை அதிகாரிகள் பார்த்து வந்த நிலையில் தற்போது புரோக்கர் வேலையை பார்க்க வற்புறுத்துவதால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சில அதிகாரிகள் செயலாளர் காக்கா பிடிப்பதற்காக அவர் சொல்லும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தற்போது அவர்கள் தான் துறையின் ராஜாக்களாக மனம் வருகின்றனர். அவர்கள் சொல்லும் நபர்களுக்கு தான் பணம் புழங்கும் இடத்தில் படி மாறுதல் என்ற நிலை ஏற்பட்டது இதனால் நீர்வளத்துறையில் பணிபுரியும் ஆக அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். உயர் அதிகாரி ஒழுங்காக இல்லை என்றால் அவரது மனைவியிடம் சொல்லி விடுவதோடு அவர் மீது முதல்வரி்டம் புகாரும் அளிக்க உள்ளோம் ” என்றார்.