கவர்னருடன் டிடிவி சந்திப்பு. தவெக அரசுக்கு மிரட்டல்?

ஒரே ஒரு எம்.எல்.ஏ. ஜெயித்து, அந்த எம்.எல்.ஏ.வையும் தவெகவுக்கு தாரை வார்த்துவிட்ட டிடிவி தினகரன் நேற்றைய தினம் கவர்னரை சந்தித்த விவகாரம் அரசியலில் ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது. இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட பதவில், ‘’மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து, தவெக அரசு மீதான குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மீது பத்தாவது அட்டவணையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க […]
பரந்தூர் நிலம் விவசாயிகளிடம் ஒப்படைப்பு..? விஜய் சீரியஸ் உத்தரவு

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டதற்காக முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி கூறியது, பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு. இந்த நிலையில், அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவதற்கு விஜய் உத்தரவிடுள்ளதாக செய்திகள் வருகின்றன. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டன. அதோடு, நிலத்தைக் கொடுத்தவர்களுக்கே அந்த […]
60 எம்.பி.க்களுடன் விஜய் பிரதமர்..? புது கூட்டணி, கட்சி பெயர் மாற்றம்

வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிஅழக வெற்றிக் கழகம் 60 எம்.பி. சீட் வெல்லும், விஜய் பிரதமராக பதவி ஏற்பார் என்று விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் வெளியிட்டுள்ள கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக விரைவில் கட்சிப் பெயர் மாற இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை இந்திய வெற்றிக் கழகம் என்று மாற்றம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கேரளத்தில் தமிழக வெற்றி […]
சட்டசபையில் எடப்பாடி ராக்ஸ்… சபாநாயகர் ஷாக்

இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதும் எடப்பாடி பழனிசாமி கொதித்து எழுந்துவிட்டார். ‘’நடந்தது தெரியாமல் பேசக்கூடாது. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை புரிந்துகொண்டு பேசவேண்டும். ஒரு கட்சியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேருவதா? எங்களோடு இருந்தவர்கள் திடீரென எப்படி வேறு […]
விஜய்யை பாராட்ட வரும் பரந்தூர் மக்கள்… கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னாகும்..?

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி புதிய பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஏகனாபுரம் கிராம மக்கள், போராட்டக் குழுவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும் ஏகனாபுரம் பிரதான சாலைக்கு முதல்வரின் பெயரைச் சூட்ட கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு இன்று முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அரசிடம் […]
திருமா, கம்யூனிஸ்ட்களுக்கு விஜய் நெத்தியடி. டோண்ட் கேர் அரசியல்

விஜய் கட்சியுடன் கூட்டணி என்று திருமாவளவன் கொடுத்த அறிவிப்புக்கு தவெகவில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார். அடுத்த நாள் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்கமும் கொடுத்தார். ஆனால், விடுதலைசிறுத்தைகள் அறிவிப்பை விஜய் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. விஜய் மட்டுமின்றி அவரது கட்சியினரும் திருமா அறிவிப்பை மதிக்கவே இல்லை. அதனால், இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு தேவையில்லாமல் வெளியிட்டதாக வருத்தப்படுகிறார். அதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கை, போராட்டங்களையும் விஜய் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. […]
விஜய் அமைச்சருக்கு கனிமொழி ஆதரவு.. உதயநிதிக்கு நேரடி எதிர்ப்பு

அமைச்சர் கீர்த்தனா உடையைக் கிண்டல் செய்து, ஆபாச வார்த்தைகளை பேசியும் திமுகவினர் சோஷ்சியல் மீடியாவில் வைரலாக்கிவருகிறார்கள். உதயநிதியை வைத்துக்கொண்டே திமுக எம்.எல்.ஏ. இந்த விவகாரத்தைப் பேசியதும் வைரலாகியது. இந்த நிலையில் கீர்த்தனாவுக்கு ஆதரவாக கனிமொழி இன்று ஒரு பதிவு போட்டுள்ளார். இது நேரடியாக உதயநிதிக்கு எதிரான அறைகூவல் என்கிறார்கள். அந்த பதிவில் கனிமொழி, ‘’காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் […]
விஜய் ஹாட்ரிக் சிக்ஸர்…. பரந்தூர், சிலிண்டர், மகளிர் பயணத்தில் தரமான சம்பவம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் இன்று நகராட்சி நிர்வாகம் – செய்தித்துறை, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை தொடர்பான விவாதம் நடைபெறுகிறது. இன்றைய தினம் முதல்வர் விஜய், ‘’மீனம்பாக்கம் விமானம் நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாள்கிறது. தொழில் வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் இன்னொரு விமானம் நிலையம் தேவை. விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இன்னொரு விமானநிலையத்துக்கான இடம் எடுக்கப்பட வேண்டும். ஆனால், முந்தைய அரசு பரந்தூர் – ஏகனாபுரத்தில் விவசாய நிலங்களை அழித்து விமான […]
பன்னீருக்கு பலமான பதவி…? விஸ்வாசத்திற்கு ஸ்டாலின் பரிசு

திமுகவில், கட்சி மாறி வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், உடனியாக மாநிலப் பதவி கிடையாது என்ற கட்டுப்பாட்டை பன்னீருக்காக ஸ்டாலின் மீறப்போவதாக பேச்சு எழுந்துள்ளது. ஏனென்றால், முதல்வர் விஜய் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்த நிற்க வேண்டும் என்ற குரல் எழுந்த போதும், எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிடும் போதும், சட்டமன்றத்தின் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு மாறாக நடைபெறும் எந்தவொரு விவாதத்தின் போதும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவான வாதங்களை […]
அடுத்த பிரதமர் விஜய்..? காங்கிரஸை மிரட்டும் பாஜக

சமீபத்தில் அமித்ஷாவை விஜய் சந்தித்துப் பேசியதிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் அனலில் போட்ட புழுவாக துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய சி.எம். நாளைய பி.எம். என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி சொன்ன கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் ரியாக்ஷன் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தியே அடுத்த பிரதமர் என்று முதன்முதலாக பேசியவர் மு.க.ஸ்டாலின். ஆனால், திமுகவை கழற்றிவிட்டு தவெக வண்டியில் ஏறிவிட்டார் ராகுல் காந்தி. இந்த நிலையில், முதல்வர் நிலையிலிருந்து பிரதமர் விஜய் என்று அவரது அமைச்சர்களே […]

