News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இலங்கை ஜோலி முடிஞ்சது. விஜய் பவர் தெரியாமல் மீனவர்கள் கைது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆட்சி செய்தபோது மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது, அடித்துவிரட்டுவது, துப்பாக்கியால் சுடுவது போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடந்துவந்தன. இப்போது ஜோசப் விஜய் ஆட்சியில் இருக்கிறார் என்பது தெரியாமல் விளையாடியிருக்கிறது இலங்கை என்று தவெகவினர் கொதிக்கிறார்கள். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த […]

ஆன்லைனில் மது விற்பனை. விஜய் சார், அடுத்து வீட்டுக்கு சப்ளை?

டாஸ்மாக் கடைகளைக் குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசிய விஜய் அரசு இன்று முதல் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் புதிய நடைமுறையைத் தொடங்கி புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் புதிய இணையதளமான Tasmac2e.in-ஐ இன்று முதல் அறிமுகமாகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து, தாங்கள் விரும்பும் டாஸ்மாக் கடையில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய சேவை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் […]

சி.எம். சார் மாதம் 2,500 ரூபாய் இல்லையா..? தாய்மாமன், வெள்ளாட்டில் கண் துடைப்பு..?

தவெக ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று விஜய் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதேபோல் தாய் மாமன் சீர் எல்லா பெண்களுக்கும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’திமுக 2025-26 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகைக்கு 13807 கோடி ஒதுக்கியது. அதாவது 1.31கோடி மகளிர் பயனாளர்களுக்கு மாசம் 1000 ரூபாய். ஆனால், தவெக அரசு மகளிர் உரிமைத் துறைக்கு 9818 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. அப்படியென்றால் மாதம் […]

அரசு பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம். விஜய் ஆட்சியில் ஒரு வேங்கைவயல்

திமுக ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வேங்கைவயலில் நடைபெற்ற குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்துக்கு இணையாக திண்டுக்கல் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். கல்வி கற்கும் ஆலயத்தில், பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் […]

தனுஷ் அரசியல் ஆரம்பம். சொந்த செலவில் பள்ளிக் கட்டிடம்

விஜய் பாணியில் அடுத்து தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்காக கல்வி சேவையைத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது, தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டிடம் ஒன்றை தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்திருக்கும் சம்பவம் அவரது அரசியல் வருகைக்கு அடித்தளம் என்கிறார்கள். அந்த கட்டிடத்திற்கு ‘தனுஷ் […]

அண்ணன் சீர், தாய்மாமன் சீர். விஜய் முதல் பட்ஜெட்

  விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். ‘’இது வெறும் வரவு-செலவுத் திட்டம் அல்ல; தமிழ்நாட்டின் அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சிக்கான சாலைவரைபடம். மக்கள் நலன், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் வெளிப்படையான நல்லாட்சியை மையமாகக் கொண்ட புதிய தமிழ்நாட்டின் அடித்தளமாக இந்தப் பட்ஜெட் அமையட்டும். […]

உதய் ஹீரோ… விஜய் வில்லன். ஒரே நாளில் மாறிய அரசியல் காட்சி

மாற்றம் என்று ஆட்சிக்கு வந்த விஜய் நேற்றைய தினம் உதயநிதியை கைது செய்வதில் காட்டிய உறுதியும், தஞ்சைக்கு அலைக்கழித்த விவகாரமும் தவெகவினரிடையே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. தேவையில்லாமல் உதயநிதியை ஹீரோவாக்கிவிட்டார் என்று விஜய் மீது புலம்புகிறார்கள். நேற்றைய தினம் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 10 லட்சம் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் 55 கிலோமீட்டர் தூரம் நின்றனர். அரசு அனுமதி இல்லாமல் உதயநிதி ரோடு ஷோ என்ற வகையில் கூட்டம் நள்ளிரவை […]

விஜய்யைக் கலாய்த்த உதயநிதி. பிரேமலதா ஆதரவு. தமிழகம் முழுக்க போராட்டம்

த்ரிஷாவை பத்தி தப்பா பேசிவிட்டார் என்று தவெகவினர் கொந்தளித்த நிலையில், உதயநிதியை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றது போலீஸ். இந்த கைது குறித்து பேசிய உதயநிதி, ‘’தவெக அரசு செய்துள்ள கைது நடவடிக்கையை காமெடியாக தான் பார்க்கிறேன். கையாலாகாத அரசு தனது கையாலாகதனத்தை மறைப்பதற்காக தன்னை கைது செய்து அனைத்தையும் திசை திருப்பி இருக்கிறது. நான் பேசாததை வெட்டி ஒட்டி பரப்புகின்றனர். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முத்தி போயுள்ளது திமுகவின் கடைசி தொண்டன் கூட […]

உதயநிதி கைது…  த்ரிஷா உத்தரவுக்கு தவெக முதல் போராட்டம்

நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில் உதயநிதி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 12 மணி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்திருந்த நிலையில் தற்போது விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை போலீஸார் நடவடிக்கை தஞ்சை […]

த்ரிஷாவுக்கு தவெக போர்க்கோலம். காவிரி விவகாரம் திசை திருப்பல்..?

சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கும் நிலையில், உதயநிதியின் கூட்டத்தில் த்ரிஷாவின் பெயர் சொல்லப்பட்டதும், அதற்கு பதில் அளித்ததும் விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. நேற்று இந்த விவகாரம் தமிழகத்தில் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆனால், இதை தேசிய ஊடகங்கள் தோண்டியெடுத்தன. இதையடுத்து இன்று உதயநிதிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘’அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி! பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் […]