News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

டாஸ்மாக் கடைகளைக் குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசிய விஜய் அரசு இன்று முதல் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் புதிய நடைமுறையைத் தொடங்கி புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் புதிய இணையதளமான Tasmac2e.in-ஐ இன்று முதல் அறிமுகமாகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து, தாங்கள் விரும்பும் டாஸ்மாக் கடையில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய சேவை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் இருப்பு விவரங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்க்க முடியும். இதனால் தேவையான பிராண்ட் கிடைக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் உள்நுழையும் போது 21 வயது நிறைவடைந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு, 5 முதல் 25 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை அல்லது கடை எண், மாவட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தேட முடியும். தேர்வு செய்த மதுபானத்திற்கான தொகையை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் செலுத்தி, பின்னர் குறிப்பிட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று பொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.

பாமக தலைவர் அன்புமணி, ‘’மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும். தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்த புதிய மாற்றம் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தந்துள்ளது. அடுத்து வீடு தேடி வந்து சப்ளை செய்யுங்க அண்ணா என்று கெஞ்சுகிறார்கள். அதையும் செய்துகாட்டுவார் விஜய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link