Share via:
நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில்
உதயநிதி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 12 மணி வரை எந்த நடவடிக்கையும்
எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்திருந்த நிலையில் தற்போது
விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசியதாக
தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை போலீஸார் நடவடிக்கை தஞ்சை டிஎஸ்பி உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு
வருகை தந்துள்ளார். மதியம் 12 மணி வரை கைதுசெய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாகக் கூறப்படும் அவதூறு
கருத்துகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு
தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சுக்கு எதிராக காவல் நிலையங்களில்
புகார் அளிக்கவும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத்துக்கு தவெக சார்பில் மூன்று
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. 1.தஞ்சாவூர் பொதுக்கூட்ட
உரை மற்றும் வீடியோவை NCW அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 2. உதயநிதி ஸ்டாலினிடம்
விளக்கம் கேட்டு, பெண்களை இழிவுபடுத்தும்/ஆபாச இரட்டை அர்த்த பேச்சுக்காக நிபந்தனையற்ற
பொது மன்னிப்பு கோர வேண்டும். 3. BNS (Bharatiya Nyaya Sanhita)-இன் தொடர்புடைய பிரிவுகளின்
கீழ் வழக்கு பதிவு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்ககாவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த நிலையில் உதயநிதி பேச்சுக்கு த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று பாஜகவும் குரல் கொடுக்கிறது. குஷ்பு தொடங்கி அண்ணாமலை வரையிலும்
கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் திமுகவினர், ‘’தன்னை அவமானப்படுத்திய உதயநிதியை
கைது செய்ய வேண்டும் என்பது த்ரிஷாவின் உத்தரவாம். அதனால் தவெக ஆளுங்கட்சியான பிறகு
முதல் கண்டனக் கூட்டம் இன்று நடத்துகிறது. எதுக்கு காவிரித் தண்ணி வரலைன்னு கர்நாடகவை
கண்டித்தா? இல்லை நீட் தேர்வை ரத்து பண்ணனும்னா? இல்லை டாஸ்மாக்ல 20ரூவா வாங்க கூடாதுன்னா?
இல்லை. அப்புறம் எதுக்கு..?
திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது விஜய் ஆட்சி. நாளை
சட்டசபை கூடுகிறது, அண்ணன் உதயநிதி சட்டசபையை மொத்தமாக கையில் எடுத்து விடுவார் என்று
பயந்து கைது செய்ய தெருவில் நிற்கிறார்கள்..’’ என்று போட்டுத் தாக்குகிறார்கள்.
உதயநிதியை பெரிய தலைவராக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.