Share via:
விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று
நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
‘’இது வெறும் வரவு-செலவுத் திட்டம் அல்ல; தமிழ்நாட்டின் அடுத்த
ஐந்தாண்டு வளர்ச்சிக்கான சாலைவரைபடம். மக்கள் நலன், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு,
தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் வெளிப்படையான நல்லாட்சியை
மையமாகக் கொண்ட புதிய தமிழ்நாட்டின் அடித்தளமாக இந்தப் பட்ஜெட் அமையட்டும். வாக்குறுதிகளை
வெறும் வார்த்தைகளாக அல்ல, செயல்படுத்தப்படும் வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் திட்டங்களாக
மாற்றும் அரசின் முதல் பட்ஜெட்டை தமிழகம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பெயரைக் கேட்டாலே,
ஊழல்வாதிகள் பதறி தலைமறைவாக ஓடுகின்றனர். நண்பா, நண்பிகள் மீது பேரன்பு கொண்ட நம்முடைய
முதலமைச்சர், முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு
திட்டம்’ என்று பெயர் வைத்து பெருந்தலைவருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு மகிழ்ச்சியான
தருணமாகும். இந்தத் தருணத்தைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் பெண்கள் அனைவரையும்
தனது குடும்பத்தில் ஒருவராக கருதுகிறார் முதலமைச்சர். திருமணம் ஆகும் பெண்களுக்கு அண்ணனின் சீர்த்திட்டத்திற்காக
812 கோடி ஒதுக்கீடு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும்
சமூக நீதியை உணர்வுபூர்வமாக ஏற்றவர். அதனால் தான், அவரது தலைமையிலான
அரசு தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காப்பதில் உறுதியுடன் உள்ளது. தமிழ்நாட்டின் 69 சதவிகித
இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
தன்னை உயிராக நேசிக்கும் ஜென் Z தலைமுறையினரை தலைசிறந்த தலைமுறையினராக
வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் முதலமைச்சர். தமிழ்நாடு நீட் தேர்வை
கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் நடந்த பல்வேறு குளறுபடிகள் எதிர்கால
தலைமுறையினரின் எதிர்கால உயர்க்கல்வியைப் பெரிதும் பாதிக்கின்றன. இதனால், நீட் தேர்வை
முறையாக ரத்து செய்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடிபடையில் மருத்துவப் படிப்பு சேர்க்கை
நடக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
அரசு மற்றும் அரசு நிதிநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு
2026-27 நிதியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் சுமார் 5.32 லட்சம் ஜென் Z மாணவர்களுக்கு
ரூ.277 கோடி ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் உடன் கூடிய சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் அறிவிப்பு அரசு பள்ளிகள் தூய்மையாகவும்
24 மணி நேரம் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
இதற்காக 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாய்
விகிதம், வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை என பல்வேறு நிதிநிலை குறியீடுகளில்
தமிழ்நாடு இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மொத்த வருவாய் துறையில் வட்டி செலுத்துவதற்கான தொகையும், பொறுப்பேற்றுக்கொண்ட
செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, புதிய திட்டங்கள் செயல்படுத்தக்கூடிய
நிதி ஆதாரம் என்பது குறைவாகவே உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப்
படிப்படியாக நிறைவேற்றுவோம்.
அதே நேரத்தில், மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க, டெண்டர்
எடுக்க கான்ட்ராக்டர்களிடன் கேட்கப்படும் தேவையற்ற சான்றிதழ்களில் போட்டியில்லாதவாறு
மாற்றப்பட்டுள்ளது. டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.
பல அரசு துறைகளில் பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டர்கள் மட்டுமே
டெண்டர் எடுக்க முடியும் என்பதை மாற்றி, எந்தவொரு துறையில் பதிவு செய்திருந்தாலும்
தகுதி இருந்தால் பிற துறை டெண்டர்களிலும் பங்கேற்க முடியும்.
இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர்களும் டெண்டர் எடுக்க ஏதுவாக, முதன்முதலாக
குறைந்த மதிப்பில் உள்ள டெண்டர்களின் நடைமுறை எளிதாக்கப்பட்டிருக்கின்றன.
அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டு கல்வி உதவித் திட்டம் செயல்படுத்த
131 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பழங்குடியினர் வாழ்விட மேம்பாட்டிற்காக 200 கோடி ரூபாய்
ஒதுக்கீடு மாநிலம் முழுவதும் பத்து ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி
வழங்கப்படும் இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு கிராமிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த
42 கோடி ஒதுக்கீடு.
அதேநேரம், முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மின் கட்டணத்தை
குறைத்து மக்களின் மனதை குளிர வைத்துள்ளார் என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் மரிய
வில்சன் கூறியது மக்களை கடுப்பாக்கியுள்ளது.