Share via:
தவெக ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும்
என்று விஜய் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதேபோல் தாய் மாமன் சீர் எல்லா
பெண்களுக்கும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’திமுக 2025-26 பட்ஜெட்டில் மகளிர்
உரிமை தொகைக்கு 13807 கோடி ஒதுக்கியது. அதாவது 1.31கோடி மகளிர் பயனாளர்களுக்கு மாசம்
1000 ரூபாய். ஆனால், தவெக அரசு மகளிர் உரிமைத் துறைக்கு 9818 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.
அப்படியென்றால் மாதம் தோறும் 1,000 ரூபாய் மட்டுமே இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கப்படும்.
இதிலும் சிலருக்கு பணம் கட் செய்வதற்கு வாய்ப்பு உண்டு.
அதேபோல், வெற்றி மகளிர் திட்டத்தில் 30000 பேருக்கு 5 வெள்ளாடுகள்
வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளஹு. தமிழ்
நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள் 12,620 பேரூராட்சிகள் 490. இந்த நிலையில் ஒரு
பஞ்சாயத்து 2 பேருக்கு மட்டுமே ஆடு வழங்கப்படுமா..?
தமிழ்நாட்டில் திருமணம் ஆகும் பெண்களுக்கு முதலமைச்சர் அண்ணன்
சீர்திட்டத்தின் மூலமாக 8 கிராம் தங்கம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்றும்
இதற்காக 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் திருமணங்கள் சுமார்
5.5 லட்சம் முதல் 6.5 லட்சம். சராசரியாக 6 லட்சம் பெண்கள் என்றாலும் இன்று 8 கிராம்
தங்கத்தின் விலை 22 கேரட் சுமார் 1,06,000 ரூபாய் சரி அரசு மொத்தமாக கொள்முதல் செய்கிறது
என்று எடுத்துக் கொண்டால் கூட 8 கிராம் 80 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நிச்சயமாக கிடைக்காது
ஒரு பட்டுப் புடவை 5,000 ரூபாய். ஒரு பெண்ணுக்கான மொத்த செலவு 85,000 ஆயிரம்.
6 லட்சம் பெண்களுக்கும் 8 கிராம் தங்கமும் ஒரு பட்டுப் புடவையும்
வழங்க வேண்டுமெனில், சுமார் 5,100 கோடி தேவைப்படும். ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பது வெறும்
812 கோடி. அப்படியென்றால் இந்த திட்டம் யாருக்கு?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.