News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கும் நிலையில், உதயநிதியின் கூட்டத்தில் த்ரிஷாவின் பெயர் சொல்லப்பட்டதும், அதற்கு பதில் அளித்ததும் விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது.

நேற்று இந்த விவகாரம் தமிழகத்தில் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆனால், இதை தேசிய ஊடகங்கள் தோண்டியெடுத்தன. இதையடுத்து இன்று உதயநிதிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘’அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி! பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் ‘ஆபாச’நிதி.

தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார். அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி. பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா – தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்…’’ என்று தூண்டிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, நயினார் நாகேந்திரன், சிவி சண்முகம் எல்லாம் த்ரிஷாவை இழுத்துப் பேசிய நேரத்தில் தவெகவினர் எதையும் கண்டுகொள்ளவில்லை. இன்று உதயநிதிக்காக மட்டும் கொந்தளிப்பதைப் பார்த்தால், இதை வைத்து சட்டமன்றத்தில் காவிரி நீர் பிரச்னையை திசை திருப்பிவிடும் நோக்கமாகவே தெரிகிறது.

இந்த விவகாரத்திற்கு திமுகவினர், ‘’தேர்தலுக்கு முன்னாடி இன்றைய முதலமைச்சர் விஜய் அங்கிள், நல்லா வாயில வந்துரும், டேஷ். போன்ற வார்த்தைகள் மட்டும் இல்லாமல், படு கேவலமான வார்த்தைகள் உபயோகப்படுத்திய பொழுது நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டிருந்த போலி நடுநிலையாளர்களும், பாஜகவினரும், பார்ப்பனர்களும், இப்பொழுது உதயநிதி அதே பாணியில் பேசினால் வந்து பாடம் எடுக்கிறார்கள்.

ஏண்டா தமிழ்நாட்டுல திமுகவுக்கு மட்டும் தான் நீங்க பாடம் எடுப்பீங்களா. திமுக மட்டும் தான் மரியாதையா பேசணுமா? என்னடா உங்க நியாயம்.

அந்த கூட்டத்தில் உதய் உண்மையில் என்னதான் சொன்னார்? கூட்டம் ஒரு குறிப்பிட்ட பெயரை உரக்கக் கத்திக்கொண்டிருந்தது. அவர் அவர்களைப் பார்த்து, புன்னகைத்து, “தண்ணீர் எங்கிருந்து வர வேண்டுமோ அங்கிருந்துதான் வர வேண்டும்” என்கிறார். பிறகு, “நான் காவேரியைப் பற்றிப் பேசுகிறேன்” என்று மேலும் கூறுகிறார்.

ஆனால், டிவிகே தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஆதரவு பெற்ற சில ஊடகங்களால் இது பெரிதுபடுத்தப்படுகிறது. விஜய் பாணியில் உதய் பேசத் தொடங்கிவிட்டார். இனி, மீடியாக்களுக்குக் கொண்டாட்டம்தான்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link