Share via:
முதல்வர் விஜய் இன்று முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்தார். இதையடுத்து அணிவகுப்பு ஊர்வலத்தில் கம்பீரமாக வலம் வந்தார்.
கேலரியில் அமர்ந்திருந்த விஜபிகளுக்கு சல்யூட் அடித்தபடி வந்தார். விஜய்யைப் பார்த்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபா கைகூப்பி வணக்கம்வைத்தனர். அவர்களுக்கு சல்யூட் வைத்த விஜய், தனக்காக எழுந்து நின்ற த்ரிஷாவைப் பார்த்ததும் ஸ்பெஷல் சல்யூட் அடித்தார்.
த்ரிஷா அந்த சல்யூட்டுக்கு தன்னுடைய ஸ்டைலில் ஒரு சல்யூட் அடித்தார். விஜய் அதைப் பார்த்து புன்னகை பூத்தார். இதை பார்த்த அத்தனை விஐபிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த போட்டோ இப்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
அதேபோல், இன்று த்ரிஷா மஞ்சள் புடவை கட்டியிருந்தாலும், அதில் கொஞ்சம் காவி நிறம் இருந்தது. விஜய், சந்திரசேகர், ஷோபா ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.
த்ரிஷா காவி நிறத்திலும், சந்திரசேகர் வெள்ளை உடையிலும் ஷோபா பச்சை நிறத்திலும் இருந்தது, அப்படியே தேசியக் கொடி போன்று இருந்தது. இந்த விவகாரத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டமாக ரசித்து வருகிறார்கள்.