News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சென்னை கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கொடியேற்றினார். காவல் துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். கொடி வணக்கம் செலுத்தினார்.

இன்று விஜய் நிகழ்த்திய சுதந்திரதின உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. என் நெஞ்சில் குடியிருக்கும் என்று வழக்கமான அவரது டிரேட் மார்க் வசனத்துடன் பேச்சைத் தொடங்கினார் விஜய்.

அவர் பேசுகையில், ‘’இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் பெருமையை எனக்கு வழங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஜென்ஸி இளைஞர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

 மக்களே… ஓட்டு போட்டுவிட்டோம். கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள். இனிமேல் தான் நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும். எங்கள் அரசுடன் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கான அனைத்து நல்ல திட்டங்களையும் செயல்படுத்த முடியும்”.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்புடன் இருக்கிறோம். ஆனால், தமிழ்நாடு நலன் என்று வந்துவிட்டால், மாநில உரிமைக்கு எதிரான முடிவுகளையும் சரி, தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கை முடிவுகளையும் சரி தவெக அரசு எப்போதும் எதிர்க்கும்.

நம்மை அடிமையாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தாலே, மக்கள் ஒன்றுகூடுவார்கள். அங்கே தான் சாதி, மதம் உடையும். அப்படி உடையும் இடத்தில் கிடைப்பதே சுதந்திரம். தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமம் தான். அதை நோக்கி தான் தவெக அரசு செயல்பட்டு வருகிறது…’’ என்றார்.

இந்த விழாவில் சிறப்பு சலுகைகள் அறிவித்தார் விஜய். அதன்படி தமிழ்நாடு முன்னாள் படை வீரர்களின் இரண்டு மகள்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்ந்துள்ளது. மாற்றுதிறன் கொண்ட படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான மாதந்திர நிதியுதவி ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்வு.

மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு. மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்வு வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்கம், மருது சகோதரர்கள், வ.உ.சி வழிதோன்றல்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு என்பது போன்ற அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிகழ்வில் நடிகை த்ரிஷா அவரது அம்மாவுடன் கலந்துகொண்டது அனைவரையும் கவர்ந்தது. அதோடு முதல்வர் விஜய்யின் தந்தை சந்திரசேகர், அவரது தாய் ஷோபா சந்திரசேகர், தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link