எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று மக்களவையில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர். அந்த இருவரின் கைகளிலும் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருந்ததாக அவை உறுப்பினர்கள் வெளியில் வந்து பேட்டி அளித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட அதே நாளான டிசம்பர் 13ம் தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 […]
கதறியழுத சாக்ஷி மாலிக் கண்ணீருக்கு இந்தியாவில் யாருமே பதறவில்லையா..?

இவர்தான் இந்தியாவின் அடையாளம், இவர்தான் ஒரு போராட்டதை எப்படி வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்பதற்கு மாடல் பெண்மணி என்றெல்லாம் சாக்ஷி மாலிக் களத்தில் நின்று இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக் கொடுத்தபோது அத்தனை பேரும் பாராட்டினார்கள். இன்று அவர் கதறியழுது கண்ணீர் சிந்தினாலும் கண்டுகொள்ள யாருமே இல்லை என்பது, இந்தியர் ஒவ்வொருவருக்கும் தலைக்குனிவு. அவர் பிரிஜ் பூஷன் குறித்த செக்ஸ் குற்றச்சாட்டை விசாரணை செய்ய வேண்டும் என்று போராட்டக் களத்தில் நின்றார். 40 நாட்கள் களத்தில் நின்று போராடினார். […]
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஏற்பாடுகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு!

வருகிற 2024ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். உலக முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, வருகிற 2023ம் ஆண்டுக்குள் […]
எண்ணூர் எண்ணெய் கசிவு: சவுமியா அன்புமணி பார்வையிட்டார்!

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் பகுதிகளை பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மிக்ஜாம் பெருமழையின் போது மழைநீருடன் சேர்த்து எண்ணெய்யும் கசிந்து எண்ணூர் பகுதியில் பெருக்கெடுத்து ஓடி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 வாரங்களுக்கு மேலாகியும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் எண்ணூர், எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி, பங்கிங்காம் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர், தாழங்குப்பம், […]
வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நிவாரண பொருட்களை வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார். குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் […]
ரஜினிகாந்த் ரசிகர்கள்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்!

நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது ரசிகர்கள் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் வாயிலாக […]
தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (21.12.2023) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களின் துயரில் பங்கேற்று ஆறுதல் கூறி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம், வெள்ளான் விளை, மைஞானபுரம், சாத்தான்குளம், தூத்துக்குடி டவுன் பகுதி மக்களுக்கு ஐந்தாயிரம் பேருக்கு பிரியாணி – தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், ரஸ்க், பெட்சிட், மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் […]
தென் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்: பாளையங்கோட்டை பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள சமாதானபுரத்திற்கு சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மக்களை சந்தித்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]
பொன்முடிக்கு அரசியல் வாழ்க்கை முடிஞ்சே போச்சு… அமைச்சர்கள் மல்லுக்கட்டு

ஆளும் தி.மு.க.வுக்கு சோதனை மேல் சோதனை என்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக செயல்பட முடியாமல் ஜெயிலுக்குள் இருக்கும் நிலையில், அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் நிலை உருவாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதன் […]
தேங்கிய வெள்ளநீர்: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நாசமான ஆவணங்கள்!

மழைநீர் வெள்ளம் 36 மணி நேர அளவுக்கு தேங்கியதால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. வரலாறு காணாத அதிகனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் மழைநீர் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளது. மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது சாலைகள், தண்டவாளங்கள் நீருடன் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து […]

