லவ் யூ விஜய் மாமா… செல்ஃபி. மக்கள் வெள்ளத்தில் மதுரை விஜய்

தாய் மாமன் திட்டத்தைத் தொடங்கிவைக்க வரும் விஜய்க்கு மதுரையே குலுங்கும் அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தனி விமானத்தில் மதுரைக்கு வந்த விஜய் ரோடு ஷோவாக வந்தார். சாலையின் இரண்டு பக்கமும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று விஜய்க்கு வரவேற்பு கொடுத்தார்கள். அதனால் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த முதல்வர் விஜய்யைப் பார்த்ததும் சாலையில் தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்ப்பரித்தார்கள். வரும் வழியில் மதுரை மீனாட்சி அம்மன் வேடமணிந்த சிறுமியைப் பார்த்ததும் வேனை நிறுத்தி, அந்த குழந்தையைத் தூக்கி கொஞ்சினார் […]
ஜெய் காளி உதயநிதிக்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு. ஆதவ் அர்ஜூனா சவால்

இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஆபாச வார்த்தைகள் பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் காளி பற்றிய பேச்சுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நேற்று இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த உதயநிதி, ‘’தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் ! ஜெய்காளி ஓம்காளி விஜய் ஒரு ஓடுகாலி. இரண்டு தொகுதியிலும் டெபாசிட் காலி’’ […]
தாய்மாமன் விஜய்க்கு செம வரவேற்பு. விழா கோலத்தில் மதுரை

தாய்மாமன் சீராக, தங்கமோதிரம் தந்திடும் விழாவுக்கு வருகை தரும் விஜய்யை வரவேற்பதற்கு மதுரையே விழா கோலத்திற்கு மாறியிருக்கிறது. காலை முதல் மதுரையில் பாட்டன், பாட்டி தொடங்கி பேரக்குழந்தை வரை விஜய்க்காக காத்திருக்க்றார்கள். மதுரை விமான நிலையம் முதல் கோரிப்பாளையம், மீனாட்சியம்மன் கோவில். வரை 16 கிலோ மீட்டர் சாலைகளின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை நீர் வடிகால் செல்லும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தொண்டர்கள் வரிசையில் நின்று பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவெக […]
உதயநிதியின் ஆபாச பிரசாரம்… செம கடுப்பில் பெண்கள்

இடைத்தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கொச்சையாகவும் ஆபாசமாகவும் பேசிய உதயநிதி என்ற ஆபாசநிதியை விஜய் ரசிகர்கள் பொளந்து கட்டுகிறார்கள். வீட்டுக்கு எதிரே பீச் இருக்கணுமாம், அப்பத்தான் மூடு வருமாம், தண்ணி வரலேன்னு சொன்னதுக்கே என் மேல கேஸ் போட்டாங்க என்று இரட்டை அர்த்தத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார். இதைக் கேட்டு அவரது பெண் வேட்பாளரே தலை குனிந்து நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. உதயநிதியின் ஆபாச பேச்சுக்கு தவெக, ‘’எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா? பரம்பரை பரம்பரையாகக் […]
கரூர் பெரும்துயரம். ஓராண்டு நினைவு நாளில் விஜய் உருக்கம்

கரூர் பெருந்துயரம் நடந்து இன்றோடு ஓராண்டாகிறது. அண்ணன் விஜய்யை ஆர்வமாகப் பார்க்கவந்து 41 அப்பாவி உயிர்கள் இந்த மண்ணை விட்டு சென்ற கருநாள். இன்றைய நாளுக்கு முதல்வர் விஜய் மனப்பூர்வமாக அஞ்சலி தெரிவித்திருக்கிறார். இன்றைய அறிக்கையில் விஜய், ‘’என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான […]
அதிமுக புள்ளிகளுக்கு பதவிகள் அள்ளிக்கொடுத்த விஜய்… மீண்டும் படையெடுப்பு.?

அதிமுகவில் இருந்து தவெக வந்தவர்களில் பெரும்பாலோருக்கு கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார் விஜய். அதிமுகவும் தவெகவும் ஒன்று இரட்டை இலையும் விசிலும் ஒன்று என தொடர்ச்சியாக தவெகவில் ஒரு அணியினர் மட்டும் தொடர்ச்சியாக சொல்லி வருவதை உண்மையாக்கும் வகையில் இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், கட்சியில் இணைந்தவுடனே சி.மகேந்திரனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. பொள்ளாச்சி முன்னாள் எம்.பி.யும், மடத்துக்குளம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வான சி மகேந்திரன் த.வெ.க.வில் நேற்றுதான் இணைந்தார். இணைந்த கையோடு […]
எம்.ஜி.ஆருக்கு விஜய் மரியாதை. திசை மாறும் அதிமுக

Vijay pays respects to MGR; AIADMK changes course.
மதுரைக்கு வரும் தாய்மாமன். விஜய்க்கு பலமான வரவேற்பு

வரும் 28ம் தேதி மதுரைக்குச் செல்லும் முதல்வர் விஜய், ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைக்க இருக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் தயாராவதாக சொல்லப்படுகிறது. தவெகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி தொடங்க போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் உசிலம்பட்டியில் வைத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உசிலம்பட்டியில் பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாச்சாரம் […]
விஜய் வர்றார் ஒதுங்கு ஒதுங்கு. களம் மாறும் இடைத்தேர்தல் நிலவரம்

இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவினர் போட்டி போட்டு வேலை செய்துவருகிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் ஓட விடுவதற்கு விஜய் வருகிறார். மதுராந்தகம் தொகுதியில் நாளையும் தாராபுரம் தொகுதியில் 30ம் தேதியும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து கள நிலவரம் மாறிவிடும் என்கிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது. குறைந்த நாட்களில் தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை முதலமைச்சர் விஜய் கொடுத்திருப்பதாக கூறி தமிழ் மாநில காங்கிரஸ் […]
21 நாளில் தொழில் அனுமதி. விஜய் அரசு தீர்மானத்திற்கு கவர்னர் ஒப்புதல்

முதலீடுகளை ஈர்க்க விஜய் அரசு கையில் எடுத்த புதிய திட்டத்துக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் கொடுத்திருப்பதை அடுத்து தொழில்துறை அபார வளர்ச்சி அடையும் என்கிறார்கள். 21 நாட்களில் புதிய தொழில்துறைக்கு அனைத்து வகையான அனுமதி கிடைத்துவிடும் என்பதால் முதலீடுகள் அதிகரிக்கும். தவெக அரசும் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026ஐ தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருந்தது. இந்த சட்ட திருத்தத்தின் முக்கிய அம்சமாக, […]

