News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அதிமுகவினர் இப்போது எம்.ஜி.ஆரை கொண்டாடுவதில்லை. எம்.ஜி.ஆர். புகழ் பற்றி பேசுவதில்லை. ஆனால், விஜய் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது அதிமுகவினரை அசரடித்துள்ளது.

அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார்.

பிரச்சாரத்திற்காகத் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய், வழியில் மதுராந்தகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சிலை அருகே தனது வாகனத்தை நிறுத்தி  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது அவர் அதிமுக தொண்டர்களை வளைக்கும் வகையில் பேசினார். அதாவது, ‘’எம்.ஜி ஆர், ஜெயலலிதா தீயசக்தியை எதிர்த்தவர்கள். எம்.ஜி ஆர் தொண்டர்களே பயப்படாதீர்கள் உங்களுடன் இந்த விஜய் இருப்பான். ஸ்டாலின் சார் உங்களுக்கு தைரியம் இருந்தால் திமுக, அதிமுக,பாஜக எல்லோரும் ஒன்றுதான் என்று சொல்லி தேர்தலில் நிற்க வேண்டியதுதானே…?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதோடு திமுகவும் அதிமுகவும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வந்தது குறித்து அழுத்தம் திருத்தமாகப் பேசியிருக்கிறார். அதனால்தான் கோபமாகி மரகதம் குமாரவேலு தன்னுடைய கட்சியில் சேர்ந்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த தொகுதி அதிமுக தொகுதி என்பதால் அந்த கட்சியினரை கவரும் வகையில் விஜய் திட்டம் போட்டு பேசியிருக்கிறார். இது செமையாக ஒர்க் அவுட் ஆகும் என்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் விஜய்யை ஏற்பார்களா என்று பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link