தொடர் மின்வெட்டு… களத்தில் நேரடியாக இறங்கிய விஜய்

தவெக ஆட்சி தொடங்கியதில் இருந்து மின்வெட்டு பெரும் தலைவலியாக இருந்துவருகிறது. அதிகாரிகள், அமைச்சர்கள் சொல்வதைக் கேட்காமல், தானே அறிந்துகொள்வதற்கு நேரடியாக விசிட் அடித்திருக்கிறார் முதல்வர் விஜய். தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மக்களும் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் இறங்கி, மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பான புகார்களும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலரும் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து […]
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் வேண்டாம். விஜய் திடீர் முடிவு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அக்கம்பக்கத்தில் இருக்கும் மீனவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதாலே, அங்கு அமைப்பதற்கு விரும்பினார் விஜய். ஆனால், இதனை மீனவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால், புதிய தலைமைச் செயலகம் கட்டுமான பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி செலவில் 15 மாடி கொண்ட தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு […]
இன்னும் இவ்வளவு லஞ்சமா..? ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது விஜய் ஆக்ஷன்..?

தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.73 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் வருவாய், நகராட்சி, பத்திரப்பதிவு, நிர்வாக, வட்டார போக்குவரத்து என 43 துறைகள் உள்ளது. இதில் அரசுக்கு நேரடி வருவாய் தரும் துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் முதல் கடை சிலை ஊழியர்கள் வரை பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் பணம் பெறுவதாக தொடர் புகார்கள் […]
ஸ்டாலினை மிரட்டும் ஜெம் வீரமணி வழக்கு… விஜய் அப்டேட்

திமுக ஆட்சியில் ஆதாரமில்லை என மூட முயன்ற வழக்கை போக்சோ நீதிமன்றம் நிராகரித்தது. அந்த வழக்கில் இப்போது 70 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் திமுக ஆட்சியின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் என்று சொல்லப்படுகிறது. ஜெம் வீரமணி வழக்கில் ஒரு பகுதியாக பிரகாஷ் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும், வீரமணியின் அலுவலகத்தில் பணியாற்றிய வீரா […]
சர்க்கரைப் பொங்கல் பரிமாறிய விஜய். காலை உணவுத் திட்டம் அட்டகாசம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை இன்று காலை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம் இன்று ஆரம்பமானது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. […]
ஸ்டார்பக்ஸ் விஜய்யுடன் கையெழுத்து. வருகிறது வெற்றி பயணத் திட்டம்

உலகம் முழுக்க புகழ்பெற்றது ஸ்டாபக்ஸ் காபி நிறுவனம். இந்த நிறுவன கடையில் காபி குடிப்பதை பெருமையாகக் கருதும் அளவுக்கு சிறப்பானது. விஜய் ஆட்சியில் இந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு கையெழுத்துப் போட்டிருக்கிறது. அதோடு, இன்று வெற்றிப் பயணத் திட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. இன்றைய தமிழக அரசு செய்திக்குறிப்பின் அடிப்படையில், ‘’தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 800 […]
ஜெம் வீரமணி வழக்கில் ஒருவரையும் விடக்கூடாது. விஜய் அதிரடி உத்தரவு.

முதலமைச்சர் விஜய், கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், திமுக அமைச்சர் தொடங்கி காவல் துறையினர் பலரும் கைது செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என கடந்த வாரம் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசித்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த மீண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தொழிலதிபர் வீரமணி மீது பல சிறுமிகள் […]
திமுகவுக்காக தவெகவை மிரட்டும் கம்யூனிஸ்ட்கள். விஜய் வார்னிங்

’’சிபிஎம், சிபிஐ கட்சிகள் ஆதரவில் தான் தவெக மந்திரி சபை இருக்கு.. சண்முகமும், வீரபாண்டியனும் ஆதரவு வாப்ஸ்ன்னு எப்போ சொல்வாங்கனு ஆளுநர் காத்துக்கிட்டு இருக்கார்…’’ என்று முத்தரசன் பேசிய பேச்சு முதல்வர் விஜய்யை கடுமையாகத் தாக்கியிருக்கிறது. எனவே, இடைத்தேர்தலுடன் கம்யூனிஸ்ட்களுடன் கனெக்ஷன் கட் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. சென்னை பாடியில் செய்தியாளர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், மூத்த தலைவருமான இரா.முத்தரசன், ‘’அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எங்கள் மீது ஏன் திடீரென கோபம் வந்தது என்று […]
மீனவ நண்பர் ஆகிறார் விஜய்… தலைமைச்செயலகத்தில் புதுவித அரசியல்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் தூண்டுதலால் மீனவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். மீனவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று விஜய் அமைச்சர்கள் உறுதி அளித்த பிறகும் போராட்டம் நடத்துவதில் மீனவர்கள் உறுதி காட்டி வருகிறார்கள். இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரடியாக களத்தில் உள்ளனர். இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’ பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]
ஓட்டுக்கு துட்டு இல்லை. திமுக, அதிமுகவுக்கு டெபாசிட் சிக்கல்..?

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிட்டது. த.வெ.க., அ.தி.மு.க., திமுக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் சார்பில், நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பிரசாரமும் களைகட்டத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் பணம் கொடுத்த திமுக, அதிமுக இந்த இடைத்தேர்தலுக்குப் பணம் கொடுக்கப்போவதில்லை என்பதால், அவர்களுக்கு ஓட்டு கிடைப்பது சிக்கல் என்கிறார்கள். நேற்றைய தினம் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் ஆதவ், ‘’தமிழக […]

