News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வெளிநாட்டு ஃபேஸ்புக் காதலியின் விசித்திர சீட்டிங்… அம்பலப்படுத்திய கரூர் சைபர் கிரைம் போலீஸ்

வெளிநாட்டுப் பெண் ஒருவர் காதலிப்பதாகச் சொன்னதை நம்பி 12.5 லட்சம் ரூபாய் ஏமாந்துபோயிருப்பதை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையிலான சைபர் கிராம் போலீஸ் தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்திருக்கிறது. வெளிநாட்டுப் பெண் அனுப்பிய நட்புக் கோரிக்கையை ஏற்று பழகி வந்திருக்கிறார். இணையத்தில் இவர்களுடைய காதல் எல்லையை மீறிப் போயிருக்கிறது. உனக்காக பரிசுகள் அனுப்புகிறேன் என்று அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து சின்னச்சின்ன பரிசுகளை அனுப்பியிருக்கிறேன். வெளிநாட்டுப் பெண்ணின் காதல், அவ்வப்போது பரிசு என்று […]

ஆயுர்வேத மருந்தைச் சொல்லி நைஜீரியர்கள் ஹைடெக் மோசடி… கரூர் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

ஏமாத்தணும்னா அவங்க ஆசையைத் தூண்டனும் என்பது போன்று ஆயுர்வேத மருந்து வாங்கிக் கொடுத்தால் பணம் தருகிறோம் என்று 45 லட்சம் ரூபாய் அளவுக்கு புதிய வகையில் மோசடி நடந்திருப்பதை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையிலான சைபர் கிராம் போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. இணையம் மூலம் அறிமுகமான வெளிநாட்டு நபர் ஒருவர் இந்தியாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளை வாங்க விரும்புகிறேன். நான் இந்தியாவுக்கு வரும்போது அதற்குரிய பணத்தை […]

இணையத்தில் சீனர்களின் கோல்டு லோன் மெகா மோசடி… கண்ணி வைத்துப் பிடித்த கரூர் சைபர் கிரைம் போலீஸ்

கரூர் மாவட்டம், கரூர் சைபர் கிரைம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் காணாமல் போன 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான 311 மொபைல் போன்கள் மற்றும் இணையதள மோசடிகளில் பாதிக்கப்பட்ட தொகை 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகரால்  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதோடு இணையதளத்தைப் பயன்படுத்தி நடந்திருக்கும் சீட்டிங் குறித்து அதிர்ச்சி தகவல்களையும் கரூர் மாவட்ட காவல் துறையினர் பகிர்ந்துகொண்டனர். தன்னை தங்க […]

தமிழகத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

இன்று தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஆகவும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆக அபிஷேக் குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும்…. தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., – பகோர்லா செபாஸ் கல்யாண், சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., – சக்திவேல், சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் – […]

காற்றில் கீதமாக கரைந்துபோன பவதாரணிக்கு இத்தனை கொடூரமான நோயா..? நெஞ்சை உருக்கும் பவதாரணியின் சூப்பர்ஹிட் பாடல்கள்..!

தமிழர்களுக்கு இளையராஜாவின் இசை இல்லாமல் பகல் விடியாது, இரவு முடியாது. அந்த அளவுக்கு தமிழர்களின் ரத்தத்தோடு கலந்திருக்கிறது இளையராஜாவின் இசை. அந்த இசைஞானியின் வாரிசுகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி. இந்த மூவரில் இளையவரான பவதாரணியின் மறைவு தமிழக இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இளையராஜாவின் மகளாக மட்டுமின்றி அற்புதமான பாடகராகவும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த பவதாரணிக்கு இப்போது 47 வயது மட்டுமே ஆகிறது. கடந்த சில வருடங்களாக பவதாரணிக்கு உடல் நலத்தில் […]

நைஜீரிய கொக்கைன் கடத்தல் கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு..!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துபவர்களையும், கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுக்கு இணங்க, காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து விரட்டிப்பிடித்து கைது செய்து வருகிறார்கள்.  சமீபத்தில் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என 63 நபர்களை கைது செய்து 1,788 கிலோ குட்கா புகையிலையைக் கைப்பற்றி அதிரடி காட்டியது.  இதன் தொடர்ச்சியாக அண்ணாநகர் காவல் மாவட்ட […]

தமிழகம் வருகிறது ஜெயலலிதா நகைகள்..! பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுமா..?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, அவரது வீட்டில் ரெய்டு செய்யப்பட்டது. அங்கு நிறைய நிறைய தங்க, வெள்ளி நகைகள் எடுக்கப்பட்டன. இந்த வழக்கில் இறுதி தீர்ப்புக்கு முன் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சசிகலா மட்டுமே தண்டனை கிடைத்து சிறையிலிருந்து வெளியே வந்தார். நீதிமன்றத்தின் வசமிருக்கும் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் இட்டு, அந்த பணத்தின் மூலம் ஜெயலலிதா கட்ட வேண்டிய தண்டத் தொகையை கட்ட வேண்டும் என்று ஒரு கருத்து நிலவி வந்த நிலையில் ஒரு புதிய […]

உதயநிதியின் இளைஞர் அணிக்கு கப்பம் கட்டுங்க… தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு அன்புக் கட்டளை

உதயநிதிக்கு கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு திடீரென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்பார்க்காத மா.செ.க்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிறு நடைபெறஉள்ளது. இந்த மாநாட்டில் பெரும் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்கு இளைஞர் அணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களும் இளைஞர் அணியினருக்கு ஆதரவாக செலவுக்குப் பணம் கொடுப்பதுடன் ஆட்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து […]

அண்ணாமலையின் நாத்தம் பிடிச்ச விளக்கம் உவ்வேக்… கொங்கு மக்களுக்கு ‘பல்லு படாம’ அவமானம்

பத்திரிகையாளர்களின் உதயநிதி சந்திப்பு குறித்து பேசிய அண்ணாமலை பல்லுபடாம என்ற எசகுபிசகான வார்த்தையை பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போன்று ஒரு வார்த்தையை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியிருந்தால் எந்த அளவுக்கு எதிர்க்கட்சியினர் பிரச்னை செய்திருப்பார்கள், ஆனால் அண்ணாமலை அப்படியொரு வார்த்தையைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களை அவமானப்படுத்திய பிறகும், யாருமே கண்டுகொள்ளவில்லை என்று தி.மு.க.வினர் பொங்கினார்கள். தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் பத்திரிகையாளர்களை பா.ஜ.க. இப்படித்தான் நேரடியாக தாக்குதல் நடத்துவார்கள், அவமானப்படுத்துவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்கள் […]

அ.தி.மு.க.வில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.   பிரபல நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் தீவிரமாக அரசியல் பணியாற்றி வந்த நிலையில், மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்ததோடு அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதிலும் குறிப்பாக பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டது பெரும் […]