பாதுகாப்பில் சென்னை நம்பர் 1… 265 கோடி ரூபாய் சொத்து மீட்பு… போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆக்ஷனுக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை மாநகர காவல்துறையில் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கடந்த 2023ம் ஆண்டு மட்டும் 3,337 சவரன் தங்கம், 50 கிலோ வெள்ளி, ரூ.3.60 கோடி பணம் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் ரூ.265 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை மாநகர காவல் எல்லையில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை கட்டுப்படுத்தவும், திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது […]
சீமானின் நாம் தமிழர் கட்சிக்குத் தடை வருகிறதா..? எல்.முருகன் அதிரடி குற்றச்சாட்டு

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றது என்.ஐ.ஏ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளதை அடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியிருக்கிறார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி தடை செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள்அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு, பல […]
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொ.ப.செ. த்ரிஷா இல்லைன்னா கீர்த்தி சுரேஷ்..!

சினிமாவில் நடித்தால் மட்டும் போதும், அரசாங்கத்தை எதிர்த்து வீர வசனம் பேசினால் போதும், சிலருக்கு திருமண மண்டபத்தில் வைத்து நலத்திட்ட உதவிகள் கொடுத்தால் போதும் தமிழகத்துக்கு முதல்வர் ஆகிவிடலாம் என்று கணக்கு போட்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நிறைய அரசியல் தலைவர்கள் கருத்து சொல்லிவருகிறார்கள். 2026 தேர்தலில் நான் முதல்வர் ஆகவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன், இப்போது விஜய் குறுக்கே வந்து இடைஞ்சல் செய்கிறார் என்று சரத்குமார் கோபம் […]
சாட்டை வீட்டில் என்.ஐ.ஏ. ரெய்டு, இடும்பாவனம் கார்த்திக்கு சம்மன்… அண்ணாமலையுடன் சீமான் மோதியது காரணமா..?

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பான தீவிரவாத இயக்கங்களிடமிருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு இடும்பாவனம் கார்த்திக்கு சம்மன் […]
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது… ஸ்டாலின், அரவிந்த் கெஜராலுக்கு விடப்படும் எச்சரிக்கையா?

அமலாக்கத் துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் கெத்து காட்டி வருகிறார் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அதேபோல், பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து இறக்கியே தீரவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிவருகிறார். இந்த இருவருக்கும் இடப்பட்டிருக்கும் எச்சரிக்கையே முதல்வர் ஹேமந்த் சோரன் கைது என்று அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28ம் […]
இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நிலக்கோட்டையில் தேவேந்திரகுல வேளாளர்கள் திடீர் போராட்டம்… அடுத்து கருப்புக்கொடி, தேர்தல் புறக்கணிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீமகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில். இந்த கோயிலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு தனி மண்டகப்படி அமைத்துத் தரும்படி நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இந்து அறநிலையத் துறை சார்பில் இதற்கு அனுமதி வழங்குவது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி மண்டகப்படி கட்டித்தர மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து நேரடியாக ஒட்டுமொத்த மக்களும் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
காரில் கஞ்சா கடத்திய கொடூர குற்றவாளிகள் 3 பேர் கைது. மடக்கிப் பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் விரட்டிப் பிடித்து கைதுசெய்து வருகிறார்கள். மடிப்பாக்கம் எஸ்.7 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது காரில் கஞ்சா கடத்திவந்த ரஞ்சன் கிஷோர் குமார், ஒத்தக்கண் அசோக், உதயகுமார் ஆகிய 3 பேரை […]
பாத்ரூமில் ரகசிய கேமரா… பிடிபட்ட வீட்டு உரிமையாளர்… வாடகை வீட்டுக்குப் போறவங்க உஷார்

சென்னையில் சொந்த வீடு இல்லாம வாடகைக்கு வீடு வீடா மாத்திட்டுப் போற மக்களே அதிகம் பேர் இருக்காங்க. அப்படி வாடகை வீட்டுக்குப் போன ஒரு பொண்ணுக்கு நடந்திருக்கிற கொடுமை ரொம்பவே அதிர வைக்குதுங்க. சென்னை ராயபுரத்துல ஒரு தம்பதி வாடகைக்கு வீடு எடுத்துட்டுப் போயிருக்காங்க. அந்த பொண்ணுக்கு பாத்ரூம் போய் குளிக்கிறப்ப ஏதோ ஒண்ணு தப்பா இருக்குதுன்னு தோணிக்கிட்டே இருந்திருக்கு. யாரோ நம்மள பார்க்கிறாங்கன்னு பொண்ணுங்களால ஈஸியா கண்டுபிடிச்சுட முடியும். அப்படித்தான் சந்தேகப்பட்டு பாத்ரூமை செக் பண்ணியிருக்காங்க. […]
பழனி முருகன் கோயிலில் மாற்று மதத்தினருக்குத் தடை… வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்காவில் இந்துக்கள் நுழையலாமா..?

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் […]
மக்கள் திருந்தவே மாட்டாங்களா…? தமிழகத்தை சுருட்டும் மைவி3 ஆட்ஸ் சீட்டிங்

சதுரங்க வேட்டை படம் வெளியான பிறகு, மக்களை அத்தனை எளிதாக ஏமாற்ற முடியாது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், ஆசையைத் தூண்டிக்கொண்டே இருந்தால் ஏமாற்றிகொண்டே இருக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி கோவையை கலக்கியிருக்கிறது மைவி3 ஆட்ஸ் நிறுவனம். திடீரென கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே புறவழிச் சாலையில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டனர். இவர்களில் பெரும்பாலோர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை வெள்ளக்கிணறு […]

