பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையிலும் இலங்கை கடற்படை அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தாலும், பா.ஜ.க.வின் மோடி ஆட்சி செய்தாலும் இலங்கை கடற்படையினர் தங்கள் அராஜகத்தை நிறுத்துவதாகவே தெரியவில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் அட்டூழியம் செய்துகொண்டே இருக்கிறார்கள். இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி நடுக்கடலில் கைது செய்வதும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் வாடிக்கையாக இருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் இதனால் […]
சென்னை போலீஸ் ஷ்பெஷல் குட்கா ரெய்டு… எட்டே நாளில் 63 பேரை தூக்கிட்டாங்க

சென்னை போலீஸ் ஷ்பெஷல் குட்கா ரெய்டு… எட்டே நாளில் 63 பேரை தூக்கிட்டாங்க தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, மாவா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சீரியஸ் உத்தரவு போட்டிருக்கிறார். இதையடுத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம், ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ எனும் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த […]
செந்தில் பாலாஜிக்கு ஜெயிலு பொங்கல்..! நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் ஜாமீன் கிடைக்குமாம்

வெற்றிகரமாக 200வது நாளை சிறைக்குள் கொண்டாடி வரும் இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி, ஜாமீனில் வெளியே வருவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று சொல்லப்படுவது தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று நிறைய பேரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை […]
ஸ்டாலினை விமர்சனம் செய்த காளியப்பன் கைது… கொந்தளிக்கும் நாம் தமிழர் இயக்கம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த குற்றச்சாட்டில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் சமூக ஊடகப் பிரிவு உறுப்பினர் காளியப்பன் கைது செய்யப்பட்டிருப்பது சீமான் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நாம் தமிழர் சாட்டை துரைமுருகன், ’முதல்வரின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஒப்பாரி வைத்த கன்னட அமைப்பினரை கண்டிக்க கூட வக்கற்ற திமுக! உதயநிதியின் தலைக்கு 10 கோடி விதித்த வடநாட்டு சாமியாரை […]
லூலு மாலுக்கு போகிறதா கோயம்பேடு நிலம்..? சீமான் அதிரடி குற்றச்சாட்டு

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்த போதும், பரந்தூர் விமான நிலையத்துக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் எதிராக பேட்டி கொடுத்தார். சீமான் பேசுகையில், ‘’400 கோடி ரூபாயில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் வேண்டும் என்று நாங்கள் கேட்டோமா? அதற்காக போராட்டம் நடத்தினோமா? மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு நிறைய விமானங்கள் வருகிறது. அதனால் 5000 ஏக்கர் கையகப்படுத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தெருவில் […]
அமெரிக்காவுக்கு தப்பியோடி டிமிக்கி கொடுத்த நிதி மோசடி கிரிமினல் … தட்டித் தூக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை மயிலாப்பூரில் இயங்கிவந்த உமா மகேஸ்வரி மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த 289 ஊழியர்களுக்கு கன்ஸ்யூமர் டியூரபில் லோன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் 98.47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ராமநாதன், வள்ளியம்மாள், ராம்மோகன், ரமேஷ், லட்சுமணன், நல்லகண்ணு ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து இறுதியறிக்கை கூடுதல் சிறப்பு பெருநகர குற்றவியல் சிசிபி வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக மேற்கண்ட […]
தமிழகத்திலும் லாரி ஸ்ட்ரைக் வருகிறதா… பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அபாயம்

மத்திய அரசு கொண்டுவதந்துள்ள புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராடி வருகின்றனர் மத்திய பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. விபத்து ஏற்படும்போது கடுமையான இழப்பீடு 10 ஆண்டு சிறைத் தண்டனை போன்றவை அமலாக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். லாரிகள் இயக்கப்படாத காரணத்தால் பெட்ரோல் பால் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் […]
வேற லெவலில் செக்ஸ் ஜாப் மோசடி… பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 லட்சம் பரிசு

ஆண்கள் இருக்கும் வரையிலும் அழிக்கவே முடியாத தொழில் என்று செக்ஸ் பிசினஸைத்தான் சொல்ல வேண்டும். எத்தனை கெடுபிடிகள் காட்டப்பட்டாலும் போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்தும் கொடுக்காமலும் எக்கச்சக்கமாக செக்ஸ் தில்லுமுல்லு நடக்கத்தான் செய்கிறது. ஆனால், இதுவரை எப்போதும் கேள்விப்படாத வகையில் ஒரு புதுவித செக்ஸ் கேம் பீகாரில் அரங்கேறியுள்ளது. செக்ஸ் விரும்பும் நண்பர்களுக்காக ஆல் இந்தியா பிரக்னெண்ட் ஜாப் ஏஜென்ஸி என்ற பெயரில் கிளப் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த கிளப்பில் இணைவதற்கு 799 ரூபாய் மட்டும் ரிஜிஸ்ட்ரேசன் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. […]
அமலாக்கத்துறை அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்கிறதா தமிழக அரசு..? சூடு பிடிக்கும் ஜாதி சம்மன் விவகாரம்

எழுதப்படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டு குறித்து, தமிழக காவல் துறை விசாரணை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திவாரியைப் போன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படும் சூழ்நிலை நிலவுவதாக சொல்லப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் உதவி பெறும் விவசாயிகளுக்கு ‘ஜாதி’ பெயரை குறிப்பிட்டு சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அளித்த […]
அமோனியா நச்சு வாயுக் கசிவுக்கே இந்த கதியா…. செத்துக் கிடக்கும் மீன்கள்… மூச்சு திணறும் மக்கள்

எண்ணூர் பகுதி மக்களுக்கு தொடர்ந்து சோதனை மேல் சோதனை வந்துகொண்டே இருக்கின்றன. திருவொற்றியூர் பகுதி தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது சில அசம்பாவிதங்கள் நடந்துவந்தன. இதையடுத்து மிக்ஜாம் புயல் நேரத்தில் ஆலை எண்ணெய் கசிவால் எண்ணூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதற்கு நிவாரணம் இன்னமும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. அதேபோல், கடலில் எண்ணெய் படலம் இன்னமும் அகற்றப்பட முடியவில்லை. அதற்குள் எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிந்து மக்களை வீட்டை விட்டு வெளீயே விரட்டியுள்ளது. வாயுக் […]

