News

Follow Us

ஏமாத்தணும்னா அவங்க ஆசையைத் தூண்டனும் என்பது போன்று ஆயுர்வேத மருந்து வாங்கிக் கொடுத்தால் பணம் தருகிறோம் என்று 45 லட்சம் ரூபாய் அளவுக்கு புதிய வகையில் மோசடி நடந்திருப்பதை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையிலான சைபர் கிராம் போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது.

இணையம் மூலம் அறிமுகமான வெளிநாட்டு நபர் ஒருவர் இந்தியாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளை வாங்க விரும்புகிறேன். நான் இந்தியாவுக்கு வரும்போது அதற்குரிய பணத்தை உங்களிடம் கொடுத்துவிட்டு மருந்துகளை வாங்கிக்கொள்கிறேன். நீங்கள் மருந்தை மட்டும் இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆசை வார்த்தைகள் கூறியிருக்கிறார்.

அந்த நிறுவனம் வேறு மாநிலத்தில் இருப்பதால் என்னால் அங்கு செல்ல முடியாது. நீங்கள் வாங்கி வைத்திருங்கள் டபுள் மடங்கு பணம் கொடுத்து பெற்றுக்கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதை நம்பி ஸ்ரீகிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் பேசியிருக்கிறார். பணம் அனுப்பினால் மருந்து அனுப்பிவைக்கிறோம் என்றதை நம்பி அந்த நிறுவனத்தின் மூன்று கணக்குகளுக்கு 45 லட்சம் பணம் அனுப்பியிருக்கிறார். ஆனால், ஆயுர்வேத மருந்துகளும் வரவில்லை, பணமும் வரவில்லை. அந்த நிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்ற பிறகே ஏமாந்ததை உணர்ந்து காவல் துறையை அணுகியிருக்கிறார்.

அதன்படி கரூர் காவல் துறையின் கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் அந்த வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். ஸ்ரீகிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணத்தை உத்தரப்பிரதேசம், இமாசலப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலுள்ள ஏடிஎம் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீட்டிங் மோசடிக்கு டெல்லியில் தங்கியிருந்த நைஜீரியர்கள் மூளையாக செயல்பட்டுள்ளனர்.

அந்த நைஜீரியர்களே ஸ்ரீகிருஷ்ணா எண்டர்பிரைச்சஸ் நிறுவனம் நடத்துவதாகச் சொல்லி போலி பல் அனுப்பியுள்ளனர். அவர்கள் விர்ச்சுவல் நம்பர் பயன்படுத்தி வாட்ஸ் ஆப் கால் மூலம் பேசியிருப்பதால், அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கிறது. எனவே, இணையத்தில் கூறப்படும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கரூர் கிரைம் பிராஞ்ச் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link