Share via:
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு தொழில்களை செய்து வரும் போதிலும், சமூக வலைதளங்களில் தலைகாட்டுவதில் பொதுவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால்தற்போது இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டார்.
அதோடு சேர்த்து தனது இன்ஸ்டா பக்கத்தில் Self Love Starts சூன் என்று பதிவு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டினார்.
அந்தவகையில் தற்போது 9SKIN என்ற பெயரில் காஸ்மெட்டிக் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளார். வருகிற 29ம் தேதி தொடங்கப்பட உள்ள இந்நிறுவனத்திற்கான போட்டோஷூட்டில் கலந்து கொண்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பிரபலமடைந்து வருகிறது. இந்த காஸ்மெட்டிக் தயாரிப்பு நிறுவனத்தை நயன்தாரா, தனது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் மற்றும் டெய்சி மார்கன் என்பவருடன் இணைந்து தொடங்க உள்ளார்.
செப்டம்பர் 7ம் தேதி ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனை படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.